தமிழகத்தில் ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை திட்டம்!!

2
தமிழகத்தில் ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை திட்டம்!!
தமிழகத்தில் ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை திட்டம்!!
தமிழகத்தில் ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை திட்டம்!!

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு உள்ள பள்ளிகளை வரும் ஜனவரி 20ம் தேதி முதல் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பள்ளிகளில் தூய்மை பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் அந்தந்த மாநிலத்தில் உள்ள நிலவரத்தை பொறுத்து பள்ளிகளை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அது குறித்த முடிவு தள்ளிப்போனது.

SBI வங்கியில் 452 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

நடப்பு கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்களுக்கு மேல் முடிவடைந்து உள்ள நிலையிலும், தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வழியாகவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இருப்பினும் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளதால், மாணவர்களை அதற்காக தயார்படுத்த வேண்டியது அவசியம்.

இதனால் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்த திட்டமிட்ட பள்ளிக்கல்வித்துறை அதற்கு தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த ஜனவரி 6, 7, 8 என மூன்று நாட்கள் கருத்துகள் பெறப்பட்டது.

சென்னை BOB வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் – மாத ஊதியம் ரூ.40 ஆயிரம்!!

இதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிகளை விரைந்து திறக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது பின்னர் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பு குறித்து கூறிய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பொங்கல் விடுமுறைக்கு வெளியூர் சென்றிருப்பர். அவர்கள் பண்டிகை முடிந்து தங்கள் வசிப்பிடத்திற்கு வர வேண்டியது அவசியம். மேலும் விடுமுறை முடிந்து ஜனவரி 18 மற்றும் 19ம் தேதிகளில் பள்ளிகளில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். எனவே வரும் ஜனவரி 20ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஆசிரியர் தரப்பிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டதால் பள்ளிக்கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

TNFUSRC வேலைவாய்ப்பு 2021 || ஊதியம்: ரூ.30,000/-

இது தொடர்பாக அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை முழுவதுமாக ஆய்வு செய்து பள்ளிகள் திறப்பு தேதியை அதிகாரப்பூர்வமாக முதல்வர் அவர்கள் அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. What ever it is, if any child get affected by corona means who will take the responsibility?SCHOOL OR GOVERNMENT?NO ONE,ONLY PARENTS HAVE TO HANDLE THE CHILD…MASTER FILM IS GOING TO RELEASE,NO ONE IS WEARING MASK TO BY THE TICKETS, THEY WILL COME JUST LIKE TO SCHOOL ,AND SPREAD THE VIRUS, OPENING THEATER,SCHOOLS ,TEMPLES ,MALLS ETC WILL INCREASE THE SPREAD OF THIS VIRUS,WAIT AND WATCH…..DO SOMETHING, NO PROPER GOVERNMENT IN OUR STATE… DISGUSTING..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!