
ஆகஸ்ட் 7 முதல் முழு ஊரடங்கு தளர்வுகள் – பள்ளிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் திறப்பு!
மாநிலம் முழுவதுமான கொரோனா பாதிப்புகளின் நிலைமையை ஆய்வு செய்த பின்னதாக பீகாரில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அளிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி பள்ளிகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் மீண்டுமாக திறக்கப்பட உள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புகளின் நிலைமையை ஆய்வு செய்த பிறகு பள்ளிகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களை திறக்கும் புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 15 முதல் 1 ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பதாகவும், ஆகஸ்ட் 7 முதல் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சமக்ரா ஷிக்ஷா’ திட்டம் 2026 ஆம் கல்வியாண்டு வரை நீட்டிப்பு – மத்திய அமைச்சர் தகவல்!
இதனிடையே கடந்த முறை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்வில் ஜூலை 12 ஆம் தேதி முதல், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் துவங்க அரசு அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வில்,
- ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் அனைத்து வகையான கடைகளும் திறக்கப்பட உள்ளது.
- பயிற்சி மையங்கள் மாற்று நாட்களில் 50% திறனுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது
- அதே நேரத்தில் பொது போக்குவரத்து சேவைகளுக்கான தடைகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
- திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
- கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு பயிற்சி நிறுவனங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
- இருப்பினும் கொரோனா தொற்றுக்கு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- தவிர கொரோனா கட்டுப்பாடுகளை கல்வி நிறுவனங்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.