‘சமக்ரா ஷிக்ஷா’ திட்டம் 2026 ஆம் கல்வியாண்டு வரை நீட்டிப்பு – மத்திய அமைச்சர் தகவல்!

0
'சமக்ரா ஷிக்ஷா' திட்டம் 2026 ஆம் கல்வியாண்டு வரை நீட்டிப்பு - மத்திய அமைச்சர் தகவல்!
'சமக்ரா ஷிக்ஷா' திட்டம் 2026 ஆம் கல்வியாண்டு வரை நீட்டிப்பு - மத்திய அமைச்சர் தகவல்!
‘சமக்ரா ஷிக்ஷா’ திட்டம் 2026 ஆம் கல்வியாண்டு வரை நீட்டிப்பு – மத்திய அமைச்சர் தகவல்!

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான சமக்ரா ஷிக்ஷா திட்டத்தை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையுள்ள கல்வியாண்டில் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

கல்வி திட்டம்:

இந்தியாவில் பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் கல்விக் கொள்கையை மாற்றி புதிய தரத்துடன் கூடிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அந்த வகையில் தேசிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியான சமக்ரா ஷிக்ஷா திட்டத்தை இந்த கல்வியாண்டு முதல் வரும் 2026 ஆம் கல்வியாண்டு வரை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது பள்ளி மாணவர்களின் கல்விக்கான நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு இலக்குகளை கவனத்தில் கொண்டு இவற்றை செயல்படுத்துவதற்காக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஆகஸ்ட் 16 கடைசி நாள்!

இந்த தேசிய கல்விக் கொள்கை, உலகளாவிய கல்வி திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறியுள்ள அவர், சுமார் ரூ.2,94,283.04 கோடி நிதி செலவுகளுடன் உருவாக்கப்பட உள்ள இந்த திட்டம் சமமான மற்றும் உள்ளடக்கிய வகுப்பறை சூழலுடன் கூடிய தரமான கல்வியை வழங்கும் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் சமக்ரா சிக்ஷா 2.0 ஆகியவற்றின் கீழ், பிளே ஸ்கூல் உருவாக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு – பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு!

இதன் மூலம் இனி அரசுப் பள்ளிகளும், விளையாட்டுப் பள்ளிகளை கொண்டிருக்கும். இதற்கிடையில், விரைவான சிறப்பு நீதிமன்றங்களுக்கான மத்திய நிதியுதவி திட்டத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும் பாலியல் பலாத்காரம் மற்றும் POCSO சட்ட வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள, 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசு இப்போது 2 ஆண்டு கால நீட்டிப்பு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!