தமிழகத்தில் 2023-24ம் கல்வியாண்டில் 216 நாட்கள் பள்ளிகள் இயங்கும் – பட்டியல் வெளியீடு!

0
தமிழகத்தில் 2023-24ம் கல்வியாண்டில் 216 நாட்கள் பள்ளிகள் இயங்கும் - பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் 2023-24ம் கல்வியாண்டில் 216 நாட்கள் பள்ளிகள் இயங்கும் - பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் 2023-24ம் கல்வியாண்டில் 216 நாட்கள் பள்ளிகள் இயங்கும் – பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் தற்போது 2023-24ம் கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 216 நாட்கள் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வேலை நாட்கள்

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் கூடுதல் வெயில் காரணத்தினால் கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 2023-24ம் கல்வியாண்டிற்கான வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், விடுப்பு நாட்கள் உள்ளிட்ட அனைத்து பள்ளி வேலை நாட்களின் விவரங்களை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டு இருக்கிறது.  அதாவது, 2023-24 ஆம் கல்வி ஆண்டில் மொத்தமாக 216 பள்ளிகள் இயங்கும் என  அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சத்தீஸ்கரில் அகவிலைப்படி 4% உயர்வு .. அத்துடன் HRA விகிதமும் அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்!

மேலும், பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 14 முதல் 27 வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும் எனவும், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்விற்கான விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து, அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 11 முதல் 22 வரை நடைபெறும் எனவும், டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை காலாண்டு தேர்வுக்கான விடுமுறை எனவும் பட்டியலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்ததாக, மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல் 18 முதல் 30 வரை நடைபெறும் எனவும், மே 1 முதல் மே 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!