மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு – பிப்ரவரி 15 வரை விடுமுறை அறிவிப்பு!

0
மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு - பிப்ரவரி 15 வரை விடுமுறை அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு - பிப்ரவரி 15 வரை விடுமுறை அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு – பிப்ரவரி 15 வரை விடுமுறை அறிவிப்பு!

கொரோனா 3ம் அலைத்தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் இப்போதைக்கு திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 15 வரை ஆன்லைன் வகுப்புகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது.

பள்ளிகள் திறப்பு

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா 3ம் அலைத்தொற்று தீவிரமடைந்து வந்ததையடுத்து இம்மாத துவக்கத்தில் இருந்து தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரைக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அம்மாநிலம் முழுவதும் கடந்த 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களையும் மூடும்படி அரசு உத்தரவிட்டது.

EPFO கணக்கு வைத்திருப்போருக்கு ஜாக்பாட் – இனி ஆன்லைன் மூலம் எக்ஸிட் தேதி மாற்றலாம்!

என்றாலும் அம்மாநிலத்தில் கொரோனா தொற்று நிலைமை கட்டுக்குள் வராததால் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கைகளை ஜனவரி 30 வரை நீட்டித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இந்நிலையில் கொரோனா தொற்று நிலைமையை மதிப்பாய்வு செய்த உத்திரப் பிரதேச அரசு, பிப்ரவரி 15ம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என்று தற்போது அறிவித்துள்ளார். என்றாலும் வரவிருக்கும் பொதுத்தேர்வுகளை கவனத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பிப்.1 முதல் கல்லூரிகள் திறப்பு – ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள்! அமைச்சர் அறிவிப்பு!

இது குறித்து உத்திரப் பிரதேச மாநில கூடுதல் தலைமை செயலர் அவ்னிஷ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘உத்திரப் பிரதேச மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மார்ச் 10ம் தேதி முதல் தேர்வுகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பொதுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு பிப்ரவரி 15 வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!