EPFO கணக்கு வைத்திருப்போருக்கு ஜாக்பாட் – இனி ஆன்லைன் மூலம் எக்ஸிட் தேதி மாற்றலாம்!

0
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு ஜாக்பாட் - இனி ஆன்லைன் மூலம் எக்ஸிட் தேதி மாற்றலாம்!
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு ஜாக்பாட் - இனி ஆன்லைன் மூலம் எக்ஸிட் தேதி மாற்றலாம்!
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு ஜாக்பாட் – இனி ஆன்லைன் மூலம் எக்ஸிட் தேதி மாற்றலாம்!

அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் வருங்கால வைப்பு (பிராவிடண்ட்) நிதி திட்டத்தில் கணக்கு வைத்து இருப்பவர்கள் தங்களது எக்ஸிட் தேதியை ஆன்லைன் மூலமாக எளிதாக அப்டேட் செய்யலாம்.

முக்கிய அப்டேட்:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலமாக அனைத்து அரசு மற்றும் சில அமைப்பு சார்ந்த தனியார் நிறுவங்களின் பணிபுரிவோருக்கு எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அவர்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படும். இந்நிலையில் பிராவிடண்ட் நிதி நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கப்பட்டது. அதில் ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறியதற்கான எக்ஸிட் தேதியை, சுயமாக ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாமா? என கேள்வி அதிகம் கேட்கப்பட்டது

தமிழகத்தில் பிப்.1 முதல் கல்லூரிகள் திறப்பு – ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள்! அமைச்சர் அறிவிப்பு!

அதற்கு முடியும் எனவும், PF பணத்தை ஆன்லைன் டிரான்ஸ்பர் செய்து கொள்ள முந்தைய பணி / நிறுவனத்தில் இருந்து வெளியேறிய தேதியை கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஒரு வேலையில் இருந்து விலகிய பிறகு, புறப்பாடு தேதி என்பது விலகிய நாளில் இருந்து இரண்டு நாளுக்கு மேல் இருக்க வேண்டும் என்ற விதிமுறை திருத்தப்படுகிறது. அதற்கு பதிலாக புறப்பாடு தேதி என்பது, முந்தைய நிறுவனம் கடைசியாக உங்களுக்கு ஊதியம் வழங்கிய மாதத்தில் எந்த நாளாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்த வசதி மூலமாக பணியாளர்கள் பணத்தை மாற்ற ஆதார் மூலமாக ஒன் டைம் பாஸ்வோர்டு பயன்படுத்தி செய்யலாம். யூஏஎன் கணக்கு எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைத்திருப்பவர்கள், அந்த ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஒன் டைம் பாஸ்வோர்டு பெறுவதன் மூலமாக இந்த வசதியை பயன்படுத்தலாம்.

எக்ஸிட் தேதியை மாற்ற எளிய வழிமுறைகள்:
  • Https://Unifiedportal-Mem.Epfindia.Gov.In/Memberinterface/ என்ற இணைய முகவரியில் யுஏஎன் கணக்கு எண் மற்றும் பாஸ்வோர்டு பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும்.
  • ‘மேனேஜ்’ என்ற டேப் மீது க்ளிக் செய்து, மார்க் எக்ஸிட் என்பதை க்ளிக் செய்ய வேண்டும். செலெக்ட் எம்ப்ளாய்மெண்ட் என்ற டிராப்டவுனில் பிஃப் அக்கவுண்ட் நம்பர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இதில் எக்ஸிட் தேதி மற்றும் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும்.
  • செக் பாக்ஸ்-இல் அப்டேட் என்பதையும், அதற்கு பிறகு ஓகே என்பதையும் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இதைத் தொடர்ந்து, உங்கள் எக்ஸிட் தேதி அப்டேட் செய்யப்பட்டது என்ற நோடிபிகேஷன் உங்களுக்கு வரும்.

சரிபார்க்கும் முறை:

  • இ-மெம்பர் சேவை தளத்தில் உள்நுழைந்து ’வியூவ்’ மெனுவில் செர்விஸ் ஹிஸ்டரி என்பதை தேர்வு செய்வதன் மூலமாக, உங்கள் எக்ஸிட் தேதி அப்டேட் ஆகியிருக்கிறதா என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
  • அதற்கு முன் ஒரு ஸ்க்ரீன் வரும், அதில், நீங்கள் இதற்கு முன்பு வேலை பார்த்த நிறுவனங்களின் பட்டியலில், ஈபிஎஃப் திட்டத்தில் நீங்கள் சேர்ந்த தேதி, ஈபிஎஃப் திட்டத்தில் இருந்து விலகிய தேதி, ஈபிஎஸ் திட்டத்தில் சேர்ந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!