தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – நாளை மறுநாள் அறிவிப்பு!
செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில் நாளை மறுநாள் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இம்முறை கல்வியில் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதி குறித்து அதிகமாக கேள்விகள் எழுப்பப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 35,178 பேருக்கு கொரோனா தொற்று – 440 பேர் உயிரிழப்பு!
முதற்கட்டமாக ஆரம்பப் பள்ளி மாணவர்களை பள்ளியில் அனுமதியளிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த அரசு சார்பில் உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
TN Job “FB
Group” Join Now
அதனை தொடர்ந்து நேற்று பள்ளிகல்வி சார்ந்த பல்வேறு விவகாரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், பள்ளிகளை திறப்பது குறித்து நாளை மறுநாள் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.