SBI வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0

SBI வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Vice President / Head, Senior Special Executive, Manager, Advisor, Senior Executive ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்றே விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

பாரத ஸ்டேட் வங்கி (SBI) வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • சென்னையில் உள்ள State Bank of India-ல் Senior Executive (Economist) பணிக்கு 02 பணியிடம், Advisor (Fraud Risk) பணிக்கு 04 பணியிடம், Manager (Performance Planning & Review) பணிக்கு 02 பணியிடம், Vice President & Head (Contact Centre Transformation) பணிக்கு 01 பணியிடம் மற்றும் Senior Special Executive பணிக்கு 09 பணியிடம் என காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Senior Executive (Economist) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Master Degree, MBA, PGDM போன்ற degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Graduation, MBA, PG in Management போன்ற degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 25 வயது என்றும் அதிகபட்சம் 63 வயது என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
  • Vice President & Head (Contact Centre Transformation), Senior Special Executive பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
  • General / OBC / EWS பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.750/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC / ST / PWD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
SBI விண்ணப்பிக்கும் முறை:

அரசு வங்கி பணிக்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் 04.05.2022 என்ற இறுதி நாளுக்குள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். நாளை (04.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்றே விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!