SBI PO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
SBI PO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!
SBI PO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!
SBI PO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள 2056 காலியிடங்களுக்கு கடந்த ஆண்டு தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளை எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

SBI தேர்வு முடிவுகள்:

இந்தியாவில் பல முன்னணி தனியார் வங்கி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியானது ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள சுமார் 2056 காலியிடங்களுக்கு PO தேர்வை நடத்த உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் தொடங்கியது. மேலும் இத்தேர்வுக்கு கால அவகாசம் அக்டோபர் 25ம் தேதி வரை வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் மார்ச் 8 வரை முழு ஊரடங்கு உத்தரவு – பிரதமர் அதிரடி அறிவிப்பு!

இதையடுத்து 2021ம் ஆண்டுக்கான புரொபேஷனரி ஆபீசர் மெயின்ஸ் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20, 21 மற்றும் 27 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற்றது. அத்துடன் கொரோனா பரவல் காரணமாக தேர்வர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். இதனை தொடர்ந்து SBI வங்கி தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டு உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதில் கூறியதாவது, “காத்திருப்பு முடிந்தது! புரோபேஷனரி அதிகாரிகளின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர் பணியில் சேர திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தக்கட்ட தேர்வு முறையான நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதையடுத்து பிப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நேர்காணல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் இறுதி முடிவுகள் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும். இந்த தேர்வு முடிவுகளை பெற https://sbi.co.in/web/careers என்ற எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். இதில் career என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக புதிய பக்கம் திரையில் காண்பிக்கப்படும். இதனை தொடர்ந்து SBI PO Mains Result 2021 என்பதை கிளிக் செய்தவுடன் PDF கோப்பு திறக்கப்படும். இதில் தங்கள் ரோல் எண்ணை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!