SBI வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு- சம்பளம்: ரூ.78230/-

0
SBI வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு- சம்பளம் ரூ.78230-
SBI வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு- சம்பளம் ரூ.78230-

SBI வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு- சம்பளம்: ரூ.78230/-

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியானது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, Advisor & Senior Executive பதவிக்கு என 8 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • சமீபத்தில் வெளியான அறிவிப்பில் Manager, Advisor & Senior Executive பணிகளுக்கென மொத்தம் 8 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 01.11.2021 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது Manager பதவிக்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். Advisor பதவிக்கு 01.03.2022 தேதியின் படி, அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும். 01.03.2022 தேதியின் படி, Senior Executive பதவிக்கு அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாட பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.63840-1990/5-73790-2220/2-78230 வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!