
டீச்சர் கணவரிடம் பேச போகும் ராதிகா, சொந்த வீட்டிற்கே விருந்தாளி போல வரும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா டீச்சரை பார்த்ததை கோபியிடம் சொல்கிறார். பின் கோபியிடம் பாக்கியாவின் கணவரிடம் பேச வேண்டும் என சொல்கிறார். அப்போது கோபி நான் சென்று பேசுகிறேன் என கிளம்பி செல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா கோபியிடன் இன்று டீச்சரை பார்த்தேன் என சொல்கிறார். அப்போது கோபி அப்படியா என கேட்க அவங்க மிகவும் வருத்தப்பட்டார்கள் அதை விட பெரிய வருத்தம் அவருடைய கணவர் தொழில் செய்ய வேண்டாம் என சொன்னதாக சொல்கிறார். அதை கேட்டு கோபி யாராக இருந்தாலும் அப்படி தான சொல்வார்கள் என சொல்கிறார். நானா இருந்தாலும் அந்த இடத்தில் அப்படி தான் சொல்வேன் என கோபி சொல்ல, அப்படியா என ராதிகா கேட்கிறார். ஆமாம் போலீஸ் கேஸ் என வந்தால் யார் சும்மாக இருப்பார் என கோபி சொல்கிறார்.
TN Job “FB
Group” Join Now
பின் ராதிகா என்னால் தான் பாக்கியாவிற்கு இந்த நிலைமை என குற்ற உணர்ச்சியாக இருப்பதாக சொல்கிறார். அப்போது கோபி ஏன் என கேட்க நான் இந்த ஆர்டரை கொடுக்காமல் இருந்தால் இந்த பிரச்சனை எதுவும் வந்திருக்காது என சொல்கிறார். பின் கோபி விடு ராதிகா என சொல்ல, இல்லை டீச்சர் தனி ஆளாக நின்று இந்த தொழிலை தொடங்கி இருக்கிறார். அவருக்கு மிகவும் ஆசைப்பட்டு இந்த வேலையை செய்கிறார் என சொல்கிறார். அதனால் நாம டீச்சரின் கணவரிடம் பேசுவோம் என ராதிகா சொல்கிறார். அதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார்.
பேசலாமே என கோபி சொல்ல கிளம்புங்கள் என சொல்கிறார். அப்போது கோபி மாட்டிக் கொண்டோம் என நினைக்க நான் மட்டும் சென்று அவரது கணவரிடம் பேசுகிறேன் என கோபி சொல்கிறார். ராதிகா சரி என சொல்ல கோபி கிளம்பி செல்கிறார். மறுபக்கம் பாக்கியா வீட்டில் எல்லா வேலைகளையும் செய்கிறார். அப்போது செல்வி நீ இப்படி வேலை செய்யாமல் இருப்பதால் எனக்கு பண கஷ்டம் என சொல்ல பாக்கியா நான் பணம் கொடுக்கிறேன் என சொல்கிறார். அவர் இவ்வளவு சொல்லியும் நாம தொழில் செய்தால் சரியாக வராது எல்லாருடைய சந்தோசம் தான முக்கியம் என பாக்கியா சொல்கிறார்.
மறுபக்கம் அமிர்தாவும் ஜானுவும் பேசிக் கொள்கின்றனர். அப்போது ஜானு உங்களுக்கு கல்யாணம் முடிந்து பாப்பா இருக்கிறாளாம் சொன்னால் நம்பவே முடியவில்லை என சொல்கிறார். எழில் நிலா நிலா என சொல்வார் அது உங்க பாப்பா என எனக்கு தெரியாது என சொல்கிறார். எனக்கு எழிலை காலேஜ் படிக்கும் போதே தெரியும் அப்பவே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை என சொல்ல அமிர்தாவிற்கு கோவம் வந்து கிளம்புகிறார். எழில் வந்து என்ன ஆச்சு என ஜானுவிடம் கேட்க அவங்க வேலை இருப்பதாக கிளம்பி விட்டதாக சொல்கிறார்.
பின் கோபி தன்னுடைய வீட்டிற்கே ராதிகா சொன்னது போல வருகிறார். அந்த நேரம் ராதிகா போன் செய்ய நான் வந்துவிட்டேன் என சொல்கிறார். ராதிகா நம்பாமல் இருக்க கோபி போட்டோ எடுத்து அனுப்புகிறார். அதை பார்த்து ராதிகா சந்தோசப்படுகிறார். நான் பேசிவிட்டு சொல்கிறேன் என கோபி சொல்கிறார். பின் சொந்த வீட்டிற்கே இப்படி வர வேண்டிய நிலைமை இருக்கிறதே என நினைத்து கோபி கடுப்பில் உள்ளே போகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.