SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு திருத்தப்பட்ட சேவை கட்டணங்களை அறிவித்துள்ளது. இதில் சில சேவைகளுக்கான கட்டணம் பூஜ்ஜியமாக கணக்கிடப்பட உள்ளது.

சேவை கட்டணம்

SBI வங்கி நிர்வாகம், அதன் வாடிக்கையளர்களுக்கு வழங்கப்படும் சில சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை திருத்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் SBI வங்கியில் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அதன் வங்கிக்கிளைகள் அல்லது தானியங்கி இயந்திரத்தில் (ATM) மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், மாதந்தோறும் 4 முறைகள் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் உள்ள சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு தகவல்!

அந்த வகையில் இலவசமாக அளிக்கப்படும் சேவைகளுக்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணமும், அதனுடன் GST யும் வசூலிக்கப்படும். அதே நேரத்தில் SBI வங்கி தவிர்த்து பிற வங்கிகளின் ATM இயந்திரங்களில் பணம் எடுக்க்கும் போதும் இதே அளவு கட்டணம் வசூலிக்கப்படும். இது தவிர SBI வங்கியில் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் 10 பக்கம் கொண்ட செக் புத்தகத்தை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு பின் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு காசோலை படிவத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.

தமிழக அரசின் சுதந்திர தினவிழா விருது – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

அதன் அடிப்படையில் 10 இலவச காசோலைகளை பயன்படுத்திய பிறகு கூடுதலாக 10 காசோலைகளை பயன்படுத்த 40 ரூபாய் கட்டணமும், அதனுடன் GST யும் வசூலிக்கப்படும். அதே போல 25 காசோலைகளை பயன்படுத்த 75 ரூபாய் கட்டணத்துடன் GST தொகையை செலுத்த வேண்டும். மேலும் 10 பக்கங்கள் கொண்ட எமர்ஜென்சி காசோலை புத்தகத்துக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் நிதி சாரா பரிவர்த்தனைகள் இலவசமாகும். இந்த கட்டண மாற்ற விதிமுறைகள் அனைத்தும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!