SBI வங்கியில் ஓய்வூதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி – வெளியான சூப்பர் அப்டேட்!

0
SBI வங்கியில் ஓய்வூதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி - வெளியான சூப்பர் அப்டேட்!
SBI வங்கியில் ஓய்வூதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி - வெளியான சூப்பர் அப்டேட்!
SBI வங்கியில் ஓய்வூதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி – வெளியான சூப்பர் அப்டேட்!

நாட்டின் முக்கிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வீடியோ கால் மூலம் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)

டிஜிட்டல் இந்தியா திட்டம் அமல்படுத்தியது முதல், அனைத்து சேவைகளும் ஆன்லைன் முறையில் மாறிவிட்டது. அந்த வகையில் சில வங்கிகளும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் நாட்டின் முக்கியமான வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஓய்வூதியதாரர்களுக்கு வீடியோ மூலமாக வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

ஓய்வூதியம் பெறுவோர் தங்களுடைய வீடுகளில் இருந்தே காணொளி மூலம் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான வசதி தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதி இலவசமாகவும் காகிதமற்றதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை SBI Pension Seva மொபைல் ஆப் அல்லது இணையதளம் மூலமாக குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பெறலாம்.

Exams Daily Mobile App Download

இந்த வசதியானது அனைத்து பொது ஓய்வூதியதரர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கான சில வரைமுறைகள் இருக்கின்றன. அதன் படி பயனர்கள் இந்தியாவிற்குள் இருக்க வேண்டும். மேலும் ஏற்கனவே தங்களது ஆதார் அட்டைகளை ஓய்வூதியக் கணக்குகளுடன் இணைத்து இருக்க வேண்டும். கடந்த ஆண்டிற்கான வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பித்தவர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்படும்.

இனி பட்டன் போன்லையும் மின் கட்டணம் செலுத்தலாம் – Internet தேவையில்லை.. வந்தாச்சு புதிய வசதி!

இந்த வசதியை பெற வாடிக்கையாளருக்கு வெப் கேமரா மற்றும் ஹெட்ஃபோன்களுடன் கூடிய ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் தேவை. மேலும் எஸ்பிஐ அதிகாரிகளுடன் நேரலையில் உரையாடும் போது செயல்முறையை சீராக இயக்க நிலையான இணைய இணைப்பு தேவை. மேலும் இந்த வசதியை பெற பயனாளர்களுக்கு பான் கார்டு கட்டாயம் ஆகும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!