தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு.. 1 மாதம் கால அவகாசம் கேட்டு தனியார் பள்ளிகள் கோரிக்கை!

0
தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு.. 1 மாதம் கால அவகாசம் கேட்டு தனியார் பள்ளிகள் கோரிக்கை!
தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு.. 1 மாதம் கால அவகாசம் கேட்டு தனியார் பள்ளிகள் கோரிக்கை!
தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு.. 1 மாதம் கால அவகாசம் கேட்டு தனியார் பள்ளிகள் கோரிக்கை!

தமிழகத்தில் அவ்வப்போது தனியார் பள்ளி பேருந்துகள் விபத்துக்குள்ளாவது அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பேருந்துகளில் கேமரா பொருத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில் தற்போது இதற்கு கால அவகாசம் வேண்டும் என தனியார் பள்ளி சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தனியார் பள்ளிகள்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அந்த பள்ளி நிர்வாகமே தனது பேருந்துகளில் பள்ளிகளுக்கு அழைத்து வருகின்றனர். அத்துடன் மீண்டும் மாணவர்களை வீடுகளுக்கும் அழைத்து செல்கின்றனர். தற்போது பள்ளி பேருந்துகளில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் அவ்வப்போது விபத்து ஏற்படுவது குறையாத வண்ணம் உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதனால் தங்களின் பள்ளி பேருந்துகளில் முன்புறமும் பின்புறமும் கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை சென்சார் கருவிகளையும் பொருத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவானது பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமையும் என அரசு தெரிவித்துள்ளது.

SBI வங்கியில் ஓய்வூதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி – வெளியான சூப்பர் அப்டேட்!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இன்னும் சில தனியார் பள்ளிகள் தங்களின் பேருந்துகளில் கேமராக்களை பொருத்தாமல் உள்ளன. மேலும் தமிழக போக்குவரத்து துறையும் பேருந்துகளில் உடனடியாக கேமராக்களை பொருத்தும் படி காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அதனால் பள்ளி பேருந்துகளில் கேமராக்களை பொருத்த ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தனியார் பள்ளி சங்கங்களின் பொதுச்செயலாளர் நந்த குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!