சமந்தா, நாக சைதன்யா இடையே தொடரும் விவாகரத்து குழப்பம் – ட்விட்டர் பதிவு!

0
சமந்தா, நாக சைதன்யா இடையே தொடரும் விவாகரத்து குழப்பம் - ட்விட்டர் பதிவு!
சமந்தா, நாக சைதன்யா இடையே தொடரும் விவாகரத்து குழப்பம் - ட்விட்டர் பதிவு!
சமந்தா, நாக சைதன்யா இடையே தொடரும் விவாகரத்து குழப்பம் – ட்விட்டர் பதிவு!

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் லவ் ஸ்டோரி பட முன்னோட்டத்துக்கு சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமந்தா வாழ்த்து:

தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் நாக சைதன்யா. இவர் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவரது மனைவி முன்னணி நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளியானது. ஒரு புறம் இந்த தகவல் உண்மையானது எனவும் மறுபுறம் வதந்தி எனவும் கூறப்பட்டு வருகிறது.

செண்பகம் தான் ரோஜாவின் அம்மா, உண்மை தெரிய போகும் நேரம் – “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

இந்நிலையில் நாக சைதன்யா திரைப்படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது நாக சைதன்யா சாய் பல்லவியுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முன்னோட்டம் திங்கட்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது குறித்து நாகசைதன்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவினை வெளியிட்டிருந்தார். அதனை பகிர்ந்த சமந்தா, சாய் பல்லவியின் பெயரை மட்டும் குறிப்பிட்டு வாழ்த்து கூறி இருந்தார்.

இனி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவாக சாய் காயத்ரி – இன்றைய எபிசோடில் அறிமுகம்!

அதை கண்ட ரசிகர்கள் ஏன் நாக சைதன்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேள்விகளை எழுப்பி வந்தனர். இது குறித்து சமந்தா தரப்பில் பதில் எதும் அளிக்கப்படாத நிலையில் சமந்தாவுக்கு நாக சைதன்யா நன்றி தெரிவித்தார். இருவருக்கும் விவாகரத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இவர்கள் சகஜமாக பேசி கொள்வது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!