மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் சம்பள உயர்வு? 4% அகவிலைப்படி (DA) அதிகரிப்பு!
கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்திற்கான தவணையில் 4% டிஏ உயர்வு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில், ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏவை அரசாங்கம் மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் நிதி நிலை உயரும். அந்த வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகவிலைப்படி (டிஏ) உயர்வுத் தொகை ஜூலை 1 முதல் 4% ஆக அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த டிஏ 38% ஆக இருக்கும்.
Exams Daily Mobile App Download
இப்போது மார்ச் மாதத்தில் வந்த அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்தின் தவணையில் 4% டிஏ உயர்வு இருக்கும் என ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக 2022ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான AICPI குறியீடு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் சரிவைக் கண்டது. அந்த வகையில் ஜனவரியில் 125.1 ஆக இருந்த AICPI பிப்ரவரியில் 125 ஆகவும், மார்ச் மாதத்தில் 1 புள்ளி என 126 ஆகவும் உயர்ந்தது.
ரூ.15,000/- சம்பளத்தில் வேலை வேண்டுமா? – இதோ உங்களுக்கான IIM Trichy பணிவாய்ப்பு!
இப்போது ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான AICP எண்கள் இன்னும் வரவில்லை. அந்த வகையில் AICPI குறியீட்டு எண் 126க்கு மேல் ஏறினால், அரசாங்கம் 4% DA உயர்வை வழங்கலாம். அதன்படி, 4 சதவீதம் DA அதிகரித்தால் தற்போதைய 34 சதவீதத்தில் இருந்து மொத்த டிஏ எண்ணிக்கை 38 சதவீதமாக உயரும். இது மத்திய அரசு ஊழியர்களின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தும்.
அதிகபட்ச அடிப்படை சம்பளத்திற்கு:
- மாத அடிப்படை சம்பளம்: ரூ 56,900
- இதுவரை DA (34%): ரூ 19,346
- திருத்தத்திற்கு பிறகு DA (38%): ரூ 21,622
- DAல் மாதாந்திர அதிகரிப்பு: ரூ 2,276
- ஆண்டு அதிகரிப்பு (மாதாந்திர அதிகரிப்பு x 12): ரூ. 27,312
- குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்திற்கு:
- மாத அடிப்படை சம்பளம்: ரூ 18,000
- இதுவரை DA (34%): ரூ 6,120
- திருத்தத்திற்கு பிறகு டிஏ (38%): ரூ: 6840
- DAல் மாதாந்திர அதிகரிப்பு: ரூ 720
- ஆண்டு உயர்வு: ரூ.8,640
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்