சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – நடைதிறப்பு அறிவிப்பு!

0
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - நடைதிறப்பு அறிவிப்பு!
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - நடைதிறப்பு அறிவிப்பு!
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – நடைதிறப்பு அறிவிப்பு!

ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதனால் நாளை பெரிய பாதை வழியாகவும் பக்தர்கள் வருவதற்கு அனுமதி உண்டு என்று கேரள அரசு தெரிவித்துள்ளது .

மகர விளக்கு பூஜை:

கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கேரள அரசு தடை விதித்துள்ளது. மேலும் பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதை தடுக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று பரவாமல் தடுக்க இன்று முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் சபரிமலை பக்தர்களுக்கு பொருந்தாது என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் ரூ.5000 வரை சம்பள உயர்வு – முதலமைச்சர் அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடந்தோறும் நடக்கும் மண்டல பூஜைக்கு உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சாமியை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் வருகின்றனர். அதே போல் டிசம்பர் 26 ஆம் தேதி நடந்த முடிந்த மண்டல பூஜைக்கு பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் மேற்கொண்டனர். மண்டல பூஜை முடிந்தவுடன் அன்று இரவு கோவில் நடை அடைக்கப்பட்டு தற்போது நடைபெற உள்ள மகர விளக்கு பூஜைக்கு திறக்கப்பட்டுள்ளது.

Post Office தினசரி ரூ.50 சேமித்தால் ரூ.35.60 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சிறந்த சேமிப்பு திட்டம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு நாளை முதல் அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழும், RT-PCR பரிசோதனையின் சான்றிதழும் கொண்டுவரவேண்டும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் அன்று மாலை 6 மணியளவில் பொன்னம்பல மேட்டில் ஜோதி தரிசனத்தை பக்தர்கள் கண்டு களிப்பார்கள் என்பதால் பக்கதர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!