PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – நாமினி இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

0
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - நாமினி இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - நாமினி இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – நாமினி இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

PF கணக்குடன் நாமினி இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசத்தை தற்போது நீட்டித்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இணைப்பதற்கான வழிமுறையை பற்றி விரிவாக பார்க்கலாம்.

கால அவகாசம் நீட்டிப்பு

இந்தியாவில் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களின் சம்பள பகுதியில் இருந்து ஒரு பகுதியை வைப்பு நிதி சேமிப்பிற்காக வழங்குகின்றனர். மேலும் இந்த வைப்பு நிதி அவர்களின் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு மொத்த தொகையாகவோ அல்லது மாதந்தோறும் பென்ஷன் தொகையாகவோ வழங்கப்படுகிறது. ஆனால் PF கணக்கு வைத்திருப்பவர்கள் பணியில் இருக்கும் போது திடீரென்று மரணம் ஏற்படும் போது இவர்களுக்கான வைப்பு தொகையை யாரிடம் வழங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – நடைதிறப்பு அறிவிப்பு!

இதனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனால் PF கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயமான முறையில் தங்கள் நாமினி விவரங்களை இணைத்து இருக்க வேண்டும் என்றும் இதற்கான கால அவகாசத்தை டிச.31ம் தேதிக்குள் இணைந்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக PF கணக்குகளுடன் நாமினிகளை இணைக்க முடியவில்லை என்று தொடர்ந்து பெரும்பாலானோர் புகார்களை எழுந்தனர். இதன் காரணமாக டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகும் நாமினி விவரங்களை இணைக்கலாம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயனாளர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PF கணக்குடன் நாமினி விவரங்களை இணைப்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

1. PF-இன் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல வேண்டும். அதில் Service என்பதில் Employees என்ற Checkbox-யை கிளிக் செய்ய வேண்டும்.

2. அடுத்ததாக திரையில் தோன்றும் Member UAN / Online Service என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

3. அதன்பின் MANAGE என்பதில் E-Nomination என்பதை select செய்து YES கொடுக்க வேண்டும். அதையடுத்து family declaration என்பதை புதுப்பிக்க வேண்டும்.

4. அதற்கு அடுத்து Add Family Details கிளிக் செய்து Nomination Details என்பதை select செய்ய வேண்டும். இப்போது நாமினி விவரங்களை உள்ளிட வேண்டும்.

5. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை நாமினிகளாக சேர்த்து கொள்ளலாம்.

6. கடைசியாக ‘Save EPF Nomination’ என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்தில் உள்ள e-sign என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

7. இப்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP எண் அனுப்பி வைக்கப்படும். இந்த OTP எண்ணை உள்ளிட வேண்டும்.

8. இறுதியாக தங்கள் PF கணக்குடன் நாமினி விவரங்கள் இணைக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!