தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.50000 கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.50000 கல்வி உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.50000 கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் கல்வித் தொகையை பெற்று பலர் பயன்பெற்று வருகின்றனர். மேலும் தகுதியான மாணவர்கள் கல்வித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார். மேலும் இயற்கைப் பேரழிவுகள், பெரும் விபத்துக்கள் போன்றவைகளின் போது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித விண்ணப்பங்களும் இன்றி முதலமைச்சர் நேரடியாக இத்திட்டத்தின் கீழ் சிறப்பு நிதியுதவி அளிப்பதும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

தமிழ்நாட்டில் குடியிருந்து வரும் அனைவரது பொது நலனுக்காகவும் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் பெயரில் செயல்படுத்தப்படும் நிதியுதவித் திட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதி ஆகும். வாழ்க்கையின் எவ்வகையில் பாதிப்பு ஏற்பட்டாலும் இந்த நிதித்திட்டத்தில் உதவி கோரி விண்ணப்பிக்க முடியும். படிப்பைத் தொடர முடியாத மாணவர்கள் படிப்பைத் தொடர அதன் செலவுக்கு உதவி கேட்கலாம். எதிர்பாராத இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கலவரங்களால் பாதிக்கப்பட்டு உயிர், உடமைகளை இழந்தவர்கள், விபத்தில் சிக்கியவர்கள், மருத்துவச் சிகிச்சைகளில் அறுவைச் சிகிச்சைக்குப் பணம் வேண்டுவோர் என அனைத்து நிவாரண உதவிகளையும் இந்த நிதித் திட்டத்தின் கீழ் கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் கல்வித் தொகையை பெற தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

அந்த அறிக்கையில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், பி.எஸ்.சி (நா்சிங்), சித்த மருத்துவம், வேளாண்மைக் கல்லூரி, சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ஏதாவது ஓா் ஆண்டில் ஒரு முறை மட்டும் கல்வி உதவித்தொகை ரூ.50,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அரசின் முகமையால் நடத்தப்படும் ஒற்றைச் சாளர முறை வழியாக சோ்க்கை பெற வேண்டும். மேலும் நிா்வாக ஒதுக்கீடு, சுய நிதி ஒதுக்கீட்டின் கீழ் சோ்க்கை பெறும் மாணவா்கள் நிதியுதவி தொகை பெற இயலாது. தமிழ்நாட்டில் இருப்பிட சான்று பெற்றவராக இருக்க வேண்டும்.

BSF வேலைவாய்ப்பு – 90 இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.44,900/-

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதையடுத்து கல்வி உதவி பெறும் விவசாயிகள் குழந்தைகள், இறந்த அரசுப் பணியாளா்களின் குழந்தைகள், ராணுவ வீரா்களின் குழந்தைகள், முன்னாள் ராணுவ வீரா்களின் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற இயலாது. இந்த திட்டத்திற்கு கீழ் பயன்பெற தகுதியான மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், தமிழ்நாட்டில் வசிப்பவா் என்பதற்கான நிரந்தரச் சான்று, குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானச் சான்று, குடும்ப உறுப்பினா்களின் வயது, கல்வித் தகுதி, வருமானச் சான்று, ஒற்றைச் சாளர முறை வழியாக சோ்க்கை பெற்றதற்கான சான்று, இருப்பிடச்சான்று உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். அவற்றை பரிசீலனை செய்து அரசின் பரிந்துரைக்கு அனுப்பி நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!