BSF வேலைவாய்ப்பு – 90 இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.44,900/-

0
BSF வேலைவாய்ப்பு - 90 இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.44,900/-
BSF வேலைவாய்ப்பு - 90 இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.44,900/-
BSF வேலைவாய்ப்பு – 90 இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.44,900/-

எல்லை பாதுகாப்பு படை எனப்படும் BSF அமைப்பில் தற்போது காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Inspector, Sub Inspector, JE ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 90 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதி நிரம்பிய நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதி நிரம்பிய நபர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Border Security Force (BSF)
பணியின் பெயர் Inspector, Sub Inspector, JE
பணியிடங்கள் 90
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 40 days from Ad.
விண்ணப்பிக்கும் முறை Online
BSF காலிப்பணியிடங்கள்:

எல்லை பாதுகாப்பு படை எனப்படும் BSF அமைப்பில் Inspector (Architect) பணிக்கு 01 பணியிடம், Sub Inspector (Works) பணிக்கு 57 பணியிடங்கள் மற்றும் Junior Engineer / Sub Inspector (Electrical) பணிக்கு 32 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 90 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Inspector, Sub Inspector, JE கல்வி தகுதி:
  • Inspector (Architect) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Architect பாடப்பிரிவில் Degree முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Sub Inspector (Works) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Diploma முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Junior Engineer / Sub Inspector (Electrical) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Electrical Engineering பாடப்பிரிவில் Diploma முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BSF வயது வரம்பு:
  • Inspector (Architect) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு குறைவான வயதினராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
  • Sub Inspector (Works) மற்றும் Junior Engineer/ Sub Inspector (Electrical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு மிக்கவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இப்பணிகளை அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கலாம்.

Inspector, Sub Inspector, JE ஊதிய தொகை:
  • Inspector (Architect) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் level – 7 ஊதிய அளவின்படி ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை ஊதியம் அளிக்கப்படும்.
Exams Daily Mobile App Download
  • Sub Inspector (Works) மற்றும் Junior Engineer/ Sub Inspector (Electrical) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் level – 7 ஊதிய அளவின்படி ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை ஊதியம் அளிக்கப்படும்.

மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தொகை பற்றி அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கலாம்.

BSF தேர்வு செயல்முறை:
  • Written Test (எழுத்து தேர்வு).
  • Medical Test (மருத்துவ பரிசோதனை)
  • Certificate Verification (சான்றிதழ் சரிபார்ப்பு)
  • Interview (நேர்காணல்)
Inspector, Sub Inspector, JE விண்ணப்பிக்கும் முறை:

எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிய விரும்புவோர் இப்பதிவின் முடிவில் உள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, இப்பணிக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!