தமிழகத்தில் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் – பணம் ‘இவர்களுக்கு’ மட்டும் தான்!

0
தமிழகத்தில் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் - பணம் 'இவர்களுக்கு' மட்டும் தான்!
தமிழகத்தில் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் - பணம் 'இவர்களுக்கு' மட்டும் தான்!
தமிழகத்தில் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் – பணம் ‘இவர்களுக்கு’ மட்டும் தான்!

தமிழகத்தில் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைக்கவும், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவவும், மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.256 குறைவு – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

இந்நிலையில், இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய மாணவிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவிகள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல் ஆகிய ஆவணங்கள் அவசியம் ஆகும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஜூன் 30 வரை (நாளை) வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தகுதிகள்:
  • 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்.
  • தனியார்ப் பள்ளியில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற பின் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
  • அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
Exams Daily Mobile App Download
  • மாணவிகள் 8 (அ) 10 (அ) 12 வகுப்புகளில் படித்து பின்னர் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
  • தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
  • 2022-2023 ம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  • இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டுக்கு செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

  • 2021-2022 ம் ஆண்டில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இம்மாணவியர்கள் தங்களது இளநிலைப் படிப்பினை நிறைவு செய்து விடுவார்கள்.
  • இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!