சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.256 குறைவு – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.256 குறைவு - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.256 குறைவு - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.256 குறைவு – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

தமிழகத்தில் தங்கத்தின் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதனால் நகைப்பிரியர்கள் எப்போது தங்கத்தை வாங்குவது என்று குழப்பத்தில் உள்ளார்கள். இந்த நிலையில் இன்றே நீங்கள் தங்கத்தை வாங்க உகந்த நாளாக உள்ளது. ஏனெனில் தங்கத்தின் விலை கிடுகிடுவென இன்று சரிவை கண்டுள்ளது.

தங்கம் விலை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தை வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் கொள்கின்றனர். இதையடுத்து தற்போது ஏறிக் கொண்டே போகும் தங்கத்தின் விலை சாமானிய மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இன்று தங்கத்தின் விலை அதிரடி சரிவை கண்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,080க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மறுநாளே ரூ.38,160 ஆக அதிகரித்து நகைப் பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து கடந்த 27ம் தேதி அன்று தங்கத்தின் விலை என்றும் இல்லாத அளவுக்கு அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது. அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4775க்கும் மற்றும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்தது. அதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,120க்கும் மற்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.4,765க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகைப்பிரியர்கள் ஓரளவிற்கு மகிழ்ச்சியாக இருந்தனர்.

இந்த நிலையில் இன்று நகைப்பிரியர்களை மேலும் மகிழ்ச்சியூட்டும் விதமாக தங்கம் விலை இன்று அதிரடி சரிவைக் கண்டுள்ளது. இன்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 256 அதிரடியாக குறைந்து சவரனுக்கு ரூ.37,864க்கும் இதே போல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.32 குறைந்து ரூ.4,733க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு ரூ.70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.65.30க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.65,300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!