தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீட்டில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு – அரசின் புதிய திட்டம்…முதல்வர் ஒப்பந்தம்!

0
தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீட்டில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு - அரசின் புதிய திட்டம்...முதல்வர் ஒப்பந்தம்!
தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீட்டில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு - அரசின் புதிய திட்டம்...முதல்வர் ஒப்பந்தம்!
தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீட்டில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு – அரசின் புதிய திட்டம்…முதல்வர் ஒப்பந்தம்!

தமிழகத்தில் ரூபாய் 400 கோடி முதலீட்டில் 2000 நபர்களுக்கான புதிய வேலைவாய்ப்பளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேக்சி விஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை குழுமத்தால் கையெழுத்திடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தின் தற்போதைய திமுக தலைமையிலான அரசு மாநிலத்தில் அதிக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை செய்து வருகிறது. தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிலகங்களை துவங்குவதற்கான அனைத்து வித உதவிகள் மற்றும் அரசு தரப்பு பணிகளும் விரைவாக செய்வதற்கான உறுதியை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் தற்போது தெலுங்கானா, குஜராத், ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 42 பல்நோக்கு சிறப்பு கண் மருத்துவமனைகளைக் கொண்ட மேக்சி விஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி குழுமம், தற்போது தமிழகத்தில் புதிய கண் சிகிச்சை மையங்களை துவங்க உள்ளது.

அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள்!

அதன்படி ரூபாய் 400 கோடி முதலீட்டில் 2000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலாக தமிழ்நாட்டின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைக்க முதல்வரின் தலைமையில் அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் தொழில் வர்த்தக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!