தமிழகத்தில் 3000 பேருக்கு தலா 10,000 ரூபாய் நிவாரணத் தொகை – முதல்வர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 3000 பேருக்கு தலா 10,000 ரூபாய் நிவாரணத் தொகை - முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் 3000 பேருக்கு தலா 10,000 ரூபாய் நிவாரணத் தொகை - முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் 3000 பேருக்கு தலா 10,000 ரூபாய் நிவாரணத் தொகை – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விநாயகர் சிலைகளை செய்து வரும் 3000 பேருக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முதல்வர் அறிவிப்பு:

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆண்டுதோறும் இந்த விழாவில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு தடை விதிக்க உள்ளதாக அரசு உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழக முதல்வரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர்!

அதில், கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க தேவையான கட்டுப்பாடுகளை 30-9-2021 வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்த, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றமும் அதைத்தான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது. கேரள மாநிலத்திலே, ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு, அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்த காரணத்தினால்தான், அங்கே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.

அதனால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரக்கூடிய சுமார் 12 ஆயிரம் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, மழை காலங்களில் தொழில் செய்ய இயலாத நிலையிலே, அவர்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுள், சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் திருவிழாக் காலங்களில் விநாயகர் சிலைகளைச் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

ENG vs IND 5வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து கோட்டையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக, பொது இடங்களில் விழாக்களை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது தொழிலை மேற்கொள்ள இயலாத நிலையில், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால பாதிப்பு நிவாரண தொகை போக, கூடுதலாக மேலும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக அளிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!