ENG vs IND 5வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து கோட்டையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

0
ENG vs IND 5வது டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து கோட்டையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!
ENG vs IND 5வது டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து கோட்டையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

ENG vs IND 5வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து கோட்டையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட்:

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டி டிரா ஆன பிறகு 2வது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தும், 4வது போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

T20 உலகக்கோப்பை அணி அறிவிப்பு எதிரொலி – பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் விலகல்!

தற்போது 5வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி முதல் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இதுவரை மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா ஒன்பது ஆட்டங்களில் விளையாடி உள்ளது, அதில் நான்கு போட்டிகள் இங்கிலாந்து வெற்றி பெற்றது. மீதமுள்ள 5 போட்டிகள் டிராவில் முடிந்தன. இதுவரை மான்செஸ்டரில் ஒரு முறை கூட வெற்றி பெறாத இந்தியா இந்த முறை தனது வெற்றியை பதிவு செய்யும் என ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.

கபில் தேவ் மற்றும் டோனிக்கு பிறகு விராட் கோஹ்லி லார்ட்ஸில் வெற்றி தேடி தந்துள்ளார். அதே போல் இங்கிலாந்து கோட்டையான மான்செஸ்டரிலும் வெற்றி தேடி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை இங்கு நடைபெற்ற போட்டியில் இந்திய அணி சார்பில் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலித்தார். அதனால் இந்திய அணியில் இந்த முறை அஸ்வின் இடம் பெறுவாரா? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!