RRB RPF 2024 அறிவிப்பு வெளியீடு – 4660 காலியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
RRB RPF 2024 அறிவிப்பு வெளியீடு - 4660 காலியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமானது (RRB) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ரயில்வே பாதுகாப்பு படை (RPF) மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையில் (RPSF) காலியாக உள்ள Constable, Sub Inspector பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் இன்று மூலம் பெறப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RRB
பணியின் பெயர் RPF Constable, Sub Inspector
பணியிடங்கள் 4660
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

RRB RPF 2024 காலிப்பணியிடங்கள்:

  • Constable – 4208 பணியிடங்கள்
  • Sub Inspector – 452 பணியிடங்கள்

RRB RPF 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Constable – 10ம் வகுப்பு
  • Sub Inspector – Graduate Degree

RRB RPF ல் 4660 காலியிடங்களுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? – அடுத்த step இது தான்!

RRB RPF 2024 வயது வரம்பு:

01.07.2024 அன்றைய தினத்தின் படி விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Constable – 18 வயது முதல் 28 வயது வரை
  • Sub Inspector – 20 வயது முதல் 28 வயது வரை

RPF 2024 ஊதியம்:

  • Constable பணிக்கு ரூ.21,7000/- என்றும்,
  • Sub Inspector பணிக்கு ரூ.35,400/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

RPF 2024 தேர்வு முறை:

  • Computer Based Examination
  • Physical Efficiency Test
  • Physical Measurement Test

RRB RPF 2024 விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / Ex-Servicemen / Female / EBC – ரூ.250/-
  • மற்ற நபர்கள் – ரூ.500/-

RRB RPF 2024 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 15.04.2024 அன்று முதல் 14.05.2024 அன்று வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download RPF Constable Notification & Application Form Link

Download RPF SI Notification & Application Form Link

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!