அனுவை பற்றிய உண்மையை அர்ஜுனிடம் சொல்லும் ரோஜா – வெளியான ப்ரோமோ!
சன் டிவி ரோஜா சீரியலில், அனு கோமாவில் இருப்பதாக நடிப்பதை ரோஜா கண்டுபிடித்து அர்ஜுனிடம் சொல்கிறார். தற்போது இது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
ரோஜா சீரியல்:
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ‘ரோஜா’ அதிக திருப்பங்களுடன் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் மூத்த நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர். வடிக்கரசி இதில் அர்ஜூன் பாட்டியாக நடித்து வருகிறார். கடந்த வாரம் முதல் பாட்டி ஜெயிலுக்கு சென்றதை வைத்து கதைக்களம் நகர்ந்தது.
8000 பேரை ப்ளாக் செய்த “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!!
இந்நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்த்தது போல அனுவின் உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகிறது. அதன்படி நேற்று ரோஜாவும், அனுவும் ஒரே ரூமில் இருக்கும் போது அனு அசைவதை ரோஜா கண்ணாடியில் பார்த்து விடுகிறார். இன்று அனுவை அசைய வைக்க அவரது கண்ணை குத்த செல்கிறார். ஆனால் அப்போதும் அனு அசையாமல் இருக்கிறார்.
TN Job “FB
Group” Join Now
பின்னர் அனுவின் தலையில் பயங்கரமாக அடிக்கிறார். அனு எதற்கும் அசையாமல் தாங்கிக் கொண்டு இருக்கிறார். மேலும் அர்ஜுனும், ரோஜாவும் கட்டிக் கொண்டிருக்க அனு பற்றிய உண்மைகளை ரோஜா சொல்கிறார். பிறகு அனு தனது அப்பாவிற்கு போன் செய்து நான் அனு பேசுகிறேன் என்று சொல்கிறார். கோமாவில் இருந்தவர் எப்படி பேசுகிறார் என அனுவின் அப்பா அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறாக ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
Super