8000 பேரை ப்ளாக் செய்த “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
8000 பேரை ப்ளாக் செய்த
8000 பேரை ப்ளாக் செய்த "பாக்கியலட்சுமி" சீரியல் நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி!!
8000 பேரை ப்ளாக் செய்த “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” தொடரில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நேகா ஷர்மா. அவரது உருவத்தை வைத்து சிலர் கிண்டல் செய்ததால் 8 ஆயிரம் பேரை சமூக வலைதளத்தில் ப்ளாக் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நேஹா. அவர்  சன் டிவி தொலைக்காட்சியில் பிள்ளை நிலா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தற்போது வாணி – ராணி, பாக்கியலட்சுமி, சித்தி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் தான் இவரது அம்மாவிற்கு குழந்தை பிறந்தது. குட்டி தங்கை குறித்தும் பதிவு செய்திருந்தார். அது மட்டுமல்லாமல் பாக்கியலட்சுமியில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யாவுடன் பல வீடீயோக்களை செய்து பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் சமூக வலைத்தளங்களில் முக்கிய பதிவை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் நான் உயரம் குறைவு தான், கொஞ்சம் Chubby -யாக இருப்பேன். சில சமயங்களில் நானே இவ்வளவு குண்டாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தது உண்டு.
பின்பு டிசைனர்கள் ட்ரெஸ்ஸிங் மூலம் அதை கட்டுப்படுத்தலாம் என்பதை உணர்ந்து கொண்டேன். நான் கற்றுக்கொண்ட உங்களிடம் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். என்னைப்போல இருக்கும் பெண்கள் வெயிஸ்ட் பெல்ட் பயன்படுத்தலாம். இல்லையெனில் நீளமான கோடு போட்ட உடைகளை அணியும்போது, எடை குறைந்தது போலவும், உயரமாக இருப்பது போலவும் தோற்றமளிப்பீர்கள். இந்த விஷயங்களை தான் நான் பின்பற்றுகிறேன். சில நேரங்களில் சமூக வலைதளங்களில் என் உருவம் குறித்து கேலி செய்பவர்களை ப்ளாக் செய்ததுண்டு. இதுவரை 8 ஆயிரம் பேரை பிளாக் செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!