ரோஜாவை காப்பாற்ற அர்ஜுன் வைத்திருக்கும் வீடியோ ஆதாரம்? ட்விஸ்டுகளுடன் வெளியான ப்ரோமோ!

1
ரோஜாவை காப்பாற்ற அர்ஜுன் வைத்திருக்கும் வீடியோ ஆதாரம்? ட்விஸ்டுகளுடன் வெளியான ப்ரோமோ!
ரோஜாவை காப்பாற்ற அர்ஜுன் வைத்திருக்கும் வீடியோ ஆதாரம்? ட்விஸ்டுகளுடன் வெளியான ப்ரோமோ!
ரோஜாவை காப்பாற்ற அர்ஜுன் வைத்திருக்கும் வீடியோ ஆதாரம்? ட்விஸ்டுகளுடன் வெளியான ப்ரோமோ!

சன் தொலைக்காட்சியில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் “ரோஜா” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

“ரோஜா” சீரியல்

சன் டிவியில் கடந்த சில வருடங்களாக பல சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றது. அதில் தற்போது மக்கள் அனைவருக்கும் பிடித்தமான சீரியல் என்றால், அது “ரோஜா” தான். இந்த சீரியலின் நாயகி ரோஜா அர்ஜுனின் அத்தை பெண். இந்த விஷயம் குடும்பத்தில் இருக்கும் யாருக்குமே தெரியாது. அர்ஜுன் மற்றும் அனு இருவருக்கு மட்டுமே தெரியும். ரோஜாவை வீட்டினர் அனைவரும் அனாதைப் பெண் என்று தான் தற்போது வரை நினைத்து கொண்டு இருக்கின்றனர். அனு தந்திரமாக அர்ஜுன் வீட்டிற்குள் நுழைந்து விடுகிறார். மற்றவர்கள் முன்பாக ரோஜாவை கெட்டவளாகவும் சித்தரிக்கிறார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க!

இந்த சுழலில் தான் அனு மாடியில் இருந்து கீழே விழுந்து விடுகிறார். ஆனால், ரோஜா மீது அபாண்டமாக பழி விழுகிறது. இதனால் தற்போது ரோஜா ஜெயிலில் இருக்கிறார். அவரை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று அர்ஜுன் தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் அர்ஜுனின் மாமா அனு மாடியில் இருந்து விழுந்த அன்று பதிவான சிசிடிவி பதிவுகளை அழித்து விடுகிறார். இதனால் டென்ஷனாகும் அர்ஜுன் அவரை நன்றாக திட்டி விடுகிறார்.

தற்போது இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அர்ஜுன் செல்லும் இடத்திற்கு எல்லாம் அவரது மாமா அவரை பின் தொடர்ந்து செல்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் அர்ஜுன் அவரை ஆட்களை வைத்து அடித்து பழி வாங்கி விடுகிறார். செண்பகம், ரோஜா மற்றும் சாக்ஷி மூவரும் ஒரே ஜெயிலில் இருக்கின்றனர். ஆனால், ராஜாவிற்கு செண்பகம் தனது ஜெயிலில் இருப்பது தெரியவில்லை.

TN Job “FB  Group” Join Now

ரோஜாவை சாக்ஷி தொடர்ந்து தொந்தரவு செய்வதை பார்த்து கோபம் கொள்ளும் செண்பகம் அவரை அடிக்கிறார். அர்ஜுன் ரோஜாவை சிறையில் இருந்து விடுவிப்பதற்கான தகுந்த வீடியோ ஆதாரத்தினை இன்ஸ்பெக்டரிடம் வழங்குகிறார். இதனால் ரோஜா காப்பாற்றப்படுவாரா? அர்ஜுன் வைத்திருக்கும் வீடியோ ஆதாரம் என்ன? என்று பல ட்விஸ்டுகளுடன் இந்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!