‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
பாக்கியலட்சுமி சீரியல்:
சின்னத்திரையில் பிரபலமான விஜய் தொலைக்காட்சி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அதன்படி பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத் தலைவியாக உள்ள பாக்கியா படிக்காத காரணத்தால் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறார். அதன் பின்னர் பல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவே அவர் புதிதாக ஒரு தொழில் தொடங்கி உள்ளார். ஆனால் அவரது கணவர் கோபி அவருக்கு துரோகம் செய்து ராதிகாவிடம் நெருக்கமாக பழகுகிறார்.
சந்தியாவிற்கு சமையல் கற்றுத் தரும் சரவணன் – இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்!!
இவை அனைத்தும் அவரது இரண்டாவது மகன் எழிலுக்கு தெரிந்து தனது தாயின் நிலையை நினைத்து கவலை கொள்கிறார். குடும்பத்தில் சந்தோசத்தை கெடுக்க கூடாது என வீட்டில் சொல்லாமல் தனது தந்தையை எச்சரித்து வருகிறார்.
TN Job “FB
Group” Join Now
இவ்வாறாக இந்த கதைக்களம் சென்று வரும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் பாக்கிய லட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி,
- சுசித்ரா (பாக்கியலட்சுமி) – ரூ.15000
- சதீஸ் (கோபிநாத்)- ரூ.12000
- ரேஷ்மா & ஜெனிஃபர் (ராதிகா) – ரூ.12000
- நேஹா மேனன் (இனியா) – ரூ.8000
- ராஜலட்சுமி (ஈஸ்வரி) – ரூ.12,000
- திவ்யா கணேஷ் (ஜெனிஃபர்) – ரூ.10,000
- வேலு லட்சுமணன் (செழியன்) – ரூ.10000
- விஷால் (எழில்) – ரூ.10000
- ரித்திகா (அமிர்தா)- ரூ.10000