Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஹாட்ஸ்டாருடன் வரும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஹாட்ஸ்டாருடன் வரும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஹாட்ஸ்டாருடன் வரும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஹாட்ஸ்டாருடன் வரும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்!

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் முன்னணி நிறுவனமாக செயல்படும் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அதிக பலன்களை தரும் பல பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஹாட்ஸ்டாருடன் வரும் ரீசார்ஜ் திட்டங்களை பற்றிய தகவல்களை பார்ப்போம்.

ரீசார்ஜ் திட்டங்கள்

இந்தியாவில் ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சிறந்த தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் வீட்டிற்குள் இருந்ததால் தினமும் வழங்கப்படும் டேட்டாவின் அளவை தாண்டி பயன்படுத்தி வந்தனர். அதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கடந்த ஆண்டு ப்ரீபெய்ட் திட்டத்தில் விலை உயர்வை அமல்படுத்தின. இந்த சமயத்தில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அதிகமாக பலன்களை தரும் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டம்! அமைச்சர் அறிவிப்பு!

மேலும் தற்போது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருவதால் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இலவச ஹாட்ஸ்டாருடன் கூடிய பல ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஜியோ கிரிக்கெட் பிளான் என்ற பெயரில் 333 ரூபாய்க்கு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 1.5 டேட்டா, தினமும் 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்கில் அன்லிமிட்டெட் அழைப்புககள் உள்ளிட்டவை 28 நாட்கள் வரை பெற முடிகிறது. அத்துடன் Disney + Hotstar சந்தாவையும் பெற முடிவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாக உள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி வெறும் 333 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலமாக திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்டவைகளை இலவசமாக Disney + Hotstar மூலமாக கண்டுகளிக்கலாம். அத்துடன் ரூ.583 மற்றும் ரூ.783 திட்டங்களிலும் Disney + Hotstar முறையே 56 மற்றும் 84 நாட்களுக்கு பெற முடிகிறது. இத்திட்டத்திலும் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இது போன்று ரூ.499, ரூ.555, ரூ.601, ரூ.799, ரூ.1066, ரூ.1,499 மற்றும் ரூ.4,199 உள்ளிட்ட திட்டங்களிலும் ஜியோவின் Disney+Hotstar சந்தாவை பெற முடிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!