Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 2 ரூபாயில் 365GB டேட்டா! தவறாமல் படிங்க!
ஜியோவின் நீண்ட திட்டங்களான ரூ.2397 மற்றும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டங்களின் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி வரை டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டங்களின் சிறப்பம்சங்களை பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
ஜியோ:
இந்தியாவில் கொரோனா பரவிய நாள் முதல் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து அனைத்து வேலைகளும் ஆன்லைன் மூலம் செய்யப்படுவதால் மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து வேலைகளும் வீட்டிலிருந்தே செய்யப்படுகிறது. வீட்டிலிருந்து பணிபுரிவோருக்கு அதிக அளவு டேட்டா தேவைப்படுகிறது. இதனால் நெட் ஒர்க் நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு அதிக டேட்டா கிடைக்கும்படியான போஸ்ட் பெய்டு மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.
பொதுமக்கள் அதிகமாக நம்புவது இவர்களை தான் – கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு!
அந்த வகையில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் கூடுதல் டேட்டா பிளான்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் அதிக விலை உள்ள டேட்டா பிளான்களும் ஜியோவில் உள்ளது. ஜியோவின் திட்டங்களால் மற்ற நெட் ஒர் வாடிக்கையாளர்களும் ஜியோவிற்கு மாறி வருகின்றனர். வீட்டிலிருந்தே எளிதாக ஆன்லைன் மூலம் ஜியோ சிம் வாங்கும் வசதியை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. ஜியோவில் ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.
PF பயனர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் பணம் எடுக்க எளிய வழிமுறை இதோ!
ஜியோவின் ரூ.2397 மற்றும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டங்கள் 365 நாட்கள் செல்லுபடியாகும். 2397 ரூபாய் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ், இலவச ஜியோ சந்தா ஆகிய நன்மைகள் உள்ளது. 2397 ரூபாய் ஜியோ திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்கிற்கு அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாடுகளுக்கும் இலவச சந்தா போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது. இந்த திட்டத்திற்கு 2 ரூபாய் மட்டுமே வித்தியாசம்.
புரிந்து போச்சு உங்கள் திட்டம்
அப்போ ரூ..599..ரீசார்ஜ் உண்டுதானே😢😢😢😢