PF பயனர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் பணம் எடுக்க எளிய வழிமுறை இதோ!

0
PF பயனர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மூலம் பணம் எடுக்க எளிய வழிமுறை இதோ!
PF பயனர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மூலம் பணம் எடுக்க எளிய வழிமுறை இதோ!
PF பயனர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் பணம் எடுக்க எளிய வழிமுறை இதோ!

பண்டிகை காலத்தை முன்னிட்டு வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பயனர்கள் இம்மாதத்திற்குள் வட்டிப்பணத்தை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணத்தை PF கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ள சில எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

PF பணம்

சமீபத்தில் மத்திய அரசு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகை 3% மாக நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருங்கால வைப்பு நிதி பயனர்களுக்கும் 8.5% வட்டிப் பணம் நிவாரணமாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு 2020-21ம் நிதியாண்டுக்கான வட்டிப் பணம் இந்த அக்டோபர் மாத இறுதிக்குள் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பழைய முறைப்படி பொருட்கள் விநியோகம்!

இந்த அறிவிப்பின் கீழ், PF வாடிக்கையாளர்களுக்கு 8.5 சதவீத வட்டிப் பணம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணத்தை பண்டிகை காலத்துக்காக எடுத்து பயன்படுத்த விரும்புபவர்கள் முதலில் PF வட்டிப்பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த சேவைகள் தற்போது ஆன்லைன் மூலமே எளிதாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் PF பயனர் SMS அனுப்புவதன் மூலமாகவே PF தொகையை சரிபார்த்துக்கொள்ள முடியும்.

இப்போது SMS மூலம் PF தொகையை சரிபார்க்க:

முதலில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து, 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN ENG என டைப் செய்து SMS அனுப்ப வேண்டும்.
அப்படி செய்தால் உங்கள் கணக்கில் இருக்கும் வரவுத்தகவல் கிடைத்துவிடும்.

ஆன்லைன் மூலம் பணம் எடுக்க:
  • முதலில் www.epfindia.gov.in என்ற இணையதளத்தை திறக்கவும்.
  • அதில் Online Advance Claim என்பதை கிளிக் செய்யவும்.
  • அங்கு Online Service பக்கத்தில் இருக்கும் Claim (Form-31,19,10C & 10D) என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
  • இப்போது வங்கி கணக்கின் கடைசி நான்கு இலக்கங்களை பதிவிட்டு சரிபார்க்கவும்.
  • தொடர்ந்து Proceed கொடுக்கவும்.
  • பிறகு டிராப் டவுன் கட்டத்தில் PF Advance என்ற வசதியை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில் PF பணத்தை எடுப்பதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும்.
  • அந்த ஆப்ஷனில் மெடிக்கல் எமர்ஜென்ஸி என்று கொடுக்கலாம்.
  • இப்போது எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை பதிவிட்டு காசோலையின் ஸ்கேன் செய்த காப்பியை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து Get Aadhaar OTP என்பதை கிளிக் செய்யவும்.
  • உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
  • அதைப் பதிவிட்டு submit கொடுக்கவும்.
  • உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டவுடன் பணம் கிடைத்துவிடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!