பொதுமக்கள் அதிகமாக நம்புவது இவர்களை தான் – கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு!

0
பொதுமக்கள் அதிகமாக நம்புவது இவர்களை தான் - கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு!
பொதுமக்கள் அதிகமாக நம்புவது இவர்களை தான் - கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு!
பொதுமக்கள் அதிகமாக நம்புவது இவர்களை தான் – கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு!

மக்களுக்கு யார் மீது அதிக நம்பிக்கை உள்ளது என்றும் யார் மீது நம்பிக்கை இல்லை என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆவின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டியல் வெளியீடு:

நாட்டில் அவ்வப்போது பல்வேறு கருத்துக்கணிப்புகள் நடத்தப்படும். தேர்தல் நேரத்தில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்தும் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் தற்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இப்சோஸ் என்ற பன்னாட்டு ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதில் மக்கள் யாரை அதிகமாக நம்புகிறார்கள் என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

PF பயனர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் பணம் எடுக்க எளிய வழிமுறை இதோ!

இந்த ஆய்வின் இறுதியில் அதிகமான மக்கள் மருத்துவர்களை நம்புவதாக கூறியுள்ளனர். 54 சதவிகித மக்கள் மருத்துவர்களை நம்புவதாக கூறிய நிலையில் 51 சதவிகித மக்கள் விஞ்ஞானிகள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து 43 சதவிகித மக்கள் ஆசிரியர்களை நம்புவதாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து மேற் கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் 27 சதவீதத்தினர் பொதுமக்களையும் 22 சதவீதத்தினர் ராணுவ வீரர்களையும் நம்புவதாக கூறியுள்ளனர். ஒரு சில இந்திய மக்களும் மலேசிய மக்களும் அரசியல்வாதிகள் மேல் நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளனர்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பழைய முறைப்படி பொருட்கள் விநியோகம்!

அதனை தொடர்ந்து யாரை நம்ப கூடாது என்று என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலோனோர் அரசியல்வாதிகளை நம்ப கூடாது என தெரிவித்துள்ளார். இதில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா மக்கள் அரசியல்வாதிகளை ஒட்டு மொத்தமாக நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதிகளை அடுத்து அரசு அமைச்சர்கள் 2ம் இடத்தை பிடித்துள்ளனர். இவர்கள் மைனஸ் 39 சதவிகித வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். இவர்களைப் போலவே விளம்பரதாரர்களும் வங்கியாளர்கள் அடுத்தடுத்த இடத்தை வகித்து வருகின்றனர். மைனஸ் பத்து சதவிகித வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் பத்திரிகையாளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here