தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளுக்கு ‘இதுதான்’ காரணம் – சுகாதாரத்துறை செயலர்!
தமிழகத்தில் மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளாததே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார். மேலும் 2வது அலையை முற்றிலும் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா அதிகரிப்பதன் காரணம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை முழுமையாக குறைந்தபாடில்லை. சில மாவட்டங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி அதிகம் கூடுவதால் தான் பாதிப்பு அதிகரிக்கிறது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
மேலும் நிறைய மக்கள் இன்னும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளவில்லை. அதனால் உயிரிழப்புகள் தொடர்கிறது என தெரிவித்துள்ளார். கவனக்குறைவு காரணமாக தடுப்பூசிகள் செலுத்துவதில் மக்கள் அலட்சியம் காட்டுவதால் பாதிப்புகள் ஏறுமுகத்தில் இருக்கிறது. குறிப்பாக ஈரோடு, கோவை, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. ஈரோட்டில் பொதுமக்கள் அதிக அளவில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளது நோய் பரவலுக்கு காரணமாக உள்ளது.
TN Job “FB
Group” Join Now
சாலையோர கடைகள் உள்ள பகுதிகளில் 23 சதவீத மக்களே முகக்கவசம் அணிகின்றனர். இதுவும் தொற்று பரவலுக்கு காரணமாகும். கொரோனா இரண்டாம் அலையை முழுமையாக கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். தொற்று குறித்த தொடர் விழிப்புணர்வும், கண்காணிப்பும் பொதுமக்களிடையே தேவை. மேலும் கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மக்கள் செயல்பட வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.