RRB குரூப் D ஸ்கோர் கார்டு வெளியீடு – பதிவிறக்கம் செய்யும் முறைகள்!

0
RRB குரூப் D ஸ்கோர் கார்டு வெளியீடு - பதிவிறக்கம் செய்யும் முறைகள்!
RRB குரூப் D ஸ்கோர் கார்டு வெளியீடு - பதிவிறக்கம் செய்யும் முறைகள்!
RRB குரூப் D ஸ்கோர் கார்டு வெளியீடு – பதிவிறக்கம் செய்யும் முறைகள்!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நடத்திய குரூப் D தேர்வின் ஸ்கோர் கார்டு வெளியாகி உள்ளது. தற்போது அதனை பதிவிறக்கம் செய்யும் முறைகளை விரிவாக காணலாம்.

RRB குரூப் D ஸ்கோர் கார்டு:

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது ட்ராக் மெயின்டெய்னர் கிரேடு-IV, உதவியாளர்/ உதவியாளர், உதவி புள்ளிகள், நிலை-I பதவிகள் ஆகிய பணிகளுக்கு 103769 காலியிடங்கள் இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டு, தேர்வு 17.08.2022 – 11.10.2022 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது. கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் தேர்வு (PET), ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய படிநிலைகளில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

கணினி வழி தேர்வுகள் டிசம்பர் 23ம் தேதி முடிவுகள் வெளியான நிலையில், இன்று தேர்வர்களின் ஸ்கோர் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு PET தேர்வுகள் சென்னை Region-க்கான உடல் தகுதி தேர்வு ஜனவரி 19 முதல் நடத்த உள்ளதாகவும், South Central Railway Region-க்கான உடல் தகுதி தேர்வு ஜனவரி 12 முதல் 21ம் தேதி வரையும், East Coast Railway Region-க்கு ஜனவரி 10 முதல் 12ம் தேதி வரை PET தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் ஸ்கோர் கார்டினை 27 டிசம்பர் 2022 அன்று முதல் 2023 ஜனவரி 1 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கமாக ரூ.1000 பரிசுத்தொகை – அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!

கணினி வழித்தேர்வு ஸ்கோர் கார்டு பதிவிறக்கம் செய்யும் முறைகள்:
  • முதலில்  rrbcdg.gov.in (அல்லது) indianrailways.gov.in  என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • பின்னர், RRB main page திறக்கும்.
  • அதில், “Active Notice Board” என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.
  • அங்கு, RRB Group D Score Card 2022 என்று தேட வேண்டும்.
  • கிடைக்கும் லிங்கில் கிளிக் செய்து, தேவையான விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • இப்பொழுது, உங்கள் Scorecard ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

DOWNLOAD SCORE CARD

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!