தமிழகத்தில் 2022ம் ஆண்டு ரேஷன் கடைகளின் விடுமுறை தினங்கள் – முழு பட்டியல் இதோ

0
தமிழகத்தில் 2022ம் ஆண்டு ரேஷன் கடைகளின் விடுமுறை தினங்கள் - முழு பட்டியல் இதோ
தமிழகத்தில் 2022ம் ஆண்டு ரேஷன் கடைகளின் விடுமுறை தினங்கள் - முழு பட்டியல் இதோ
தமிழகத்தில் 2022ம் ஆண்டு ரேஷன் கடைகளின் விடுமுறை தினங்கள் – முழு பட்டியல் இதோ

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு 2022ம் ஆண்டு 12 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

ரேஷன் கடைகள்:

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 34,773 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 309 இடங்களில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2,20,14,963 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகள் கொடுப்பட்டு அதில் 6,88,72,049 பேர் பயனடைந்து வருகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிச.25க்கு முன் 18 மாத DA நிலுவை – 7வது ஊதியக்குழு தகவல்!

முதலமைச்சர் தேர்தல் அறிவிப்பின்படி கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் ரேஷன் கடை மூலம் தான் மக்களுக்கு சிறப்பான முறையில் வழங்கப்பட்டது. 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அரிசி கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள், கரும்பு, துணி பை என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ஜனவரி 3ம் தேதி முதல் வழங்க உள்ளது.

இந்நிலையில் 2022ம் ஆண்டுக்கான ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி,

(1) பொங்கல் பண்டிகை – ஜனவரி 14, வெள்ளிக்கிழமை
(2) தைப்பூசம் – ஜனவரி 18, செவ்வாய் கிழமை
(3) குடியரசு தினம் – ஜனவரி 26, புதன்கிழமை
(4) தமிழ் புத்தாண்டு / டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் / மகாவீரர் ஜெயந்தி – ஏப்ரல் 14 வியாழன் கிழமை
(5) மே தினம் – மே 1, ஞாயிற்றுக்கிழமை
(6) ரம்ஜான் – மே 5, செவ்வாய் கிழமை
(7) சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15, திங்கட்கிழமை ,
(8) விநாயகர் சதுர்த்தி – ஆகஸ்ட் 31, புதன்கிழமை
(9) காந்தி ஜெயந்தி – அக்டோபர் 2, ஞாயிற்றுக்கிழமை
(10) விஜயதசமி – அக்டோபர் 10, புதன்கிழமை
(11) தீபாவளி – அக்டோபர் 24, திங்கட்கிழமை
(12) கிறிஸ்துமஸ் – டிசம்பர் 25, ஞாயிற்றுக்கிழமை

மேலே உள்ள விடுமுறை நாட்கள் தவிர வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாட்களும் இருக்கின்றன. இந்த விடுமுறை நாட்களை குறித்து வைத்துக் கொண்டு பொதுமக்கள் ரேஷன் பொருட்களை தகுந்த நாட்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!