விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ராஜு – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ராஜு - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ராஜு - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ராஜு – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழக மக்கள் பேராவலுடன் எதிர்பார்த்து வந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்லப்போவது ஒரு முக்கிய விஜய் டிவி பிரபலம் என்கிற தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிக் பாஸ் டைட்டில்

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘பிக் பாஸ்’ சீசன் 5 சுமார் 100 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 4 சீசன்களாக ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 5 வது சீசனும் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்றிருந்தது. இம்முறை 18 போட்டியாளர்கள், 2 வைல்ட் கார்டு என்ட்ரி உட்பட மொத்தம் 20 பேர் பங்குபெற்று வந்த நிலையில் இப்போது வெறும் 5 பேர் மட்டுமே ஃபினாலே போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் ரீஎன்ட்ரி கொடுத்த பிரியங்கா? வெளியான ஷாக் தகவல்!

இவர்களுக்கான வோட்டிங் ப்ராசஸ் முடிவடைந்த நிலையில், இன்று ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் பைனல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. அதாவது, தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட இருப்பதால், ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் ஷூட்டிங் இன்று எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இம்முறை டைட்டிலை வெல்வது போட்டியாளர் ராஜு என்கிற தகவல் தற்சமயம் வெளியாகியுள்ளது.

மீண்டும் பள்ளிகள் திறப்பு, மாணவர்களுக்கு ‘இது’ கட்டாயம் – மாநில அரசு அறிவிப்பு!

இந்த ‘பிக் பாஸ்’ சீஸனின் ஆரம்பம் முதலே மக்களின் ஆதரவையும், அன்பையும் சம்பாதித்து வந்த ராஜு தான் இந்த டைட்டிலை வென்றுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக போட்டிகள் என்றாலும் சரி, மற்றவர்களை சிரிக்க வைப்பது, கலகலப்பூட்டுவது என்று அனைத்திலும் சூப்பர் ஆக விளையாடி ராஜு இந்த சீசனுக்கான டைட்டிலை வென்றுள்ளது அவரது ரசிகர்களுக்கு எக்கச்சக்கமான மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. குறிப்பாக இதுவரை எந்தவொரு ‘பிக் பாஸ்’ சீசனிலும் நடக்காத வகையில், இந்த சீசனில் ராஜு ஒருவர் மட்டும் மக்களின் 50% வாக்குகளை தனி ஒருவராக பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here