விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் ரீஎன்ட்ரி கொடுத்த பிரியங்கா? வெளியான ஷாக் தகவல்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 இல் ரீஎன்ட்ரி கொடுத்த பிரியங்கா? வெளியான ஷாக் தகவல்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 இல் ரீஎன்ட்ரி கொடுத்த பிரியங்கா? வெளியான ஷாக் தகவல்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் ரீஎன்ட்ரி கொடுத்த பிரியங்கா? வெளியான ஷாக் தகவல்!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் பிரியங்கா வெளியேறியதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், அவர் ஃபினாலே போட்டியில் கலந்து கொள்வாரா என்று ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் ஃபினாலே

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்து வந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் ஃபினாலே போட்டிகள் நாளை ஒளிபரப்பாக இருக்கிறது. விஜய் டிவியில் சுமார் 100 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய இருக்கிறது. இப்போது தான் ஆரம்பித்தது போல தோன்றும் ‘பிக் பாஸ்’ சீசன் 5 சீக்கிரமாக முடிவுக்கு வந்தது ரசிகர்களை சற்று வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. என்றாலும் இந்த நிகழ்ச்சியின் ஃபார்மேட் படி அடுத்ததாக இறுதி போட்டிகள் நடத்தப்படவேண்டியது தான் மீதம்.

இப்படி இருக்க ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இறுதி போட்டி அதாவது பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்கப்போவது யார் என்பதை அறிவிக்கும் முக்கிய நிகழ்வானது இன்று படப்பிடிப்பு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உடல்நிலை குறைபாடு காரணமாக ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியேறிய போட்டியாளர் பிரியங்கா மீண்டும் ஃபினாலே போட்டியில் கலந்து கொள்வாரா, மாட்டாரா என்று ரசிகர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாம் ஏற்கனவே அறிந்தபடி, போட்டியாளர்கள் ராஜு அல்லது பிரியங்கா தான் இம்முறை பிக் பாஸ் டைட்டிலை வெல்வதற்கு அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. ஏனென்றால் அதிகளவு வாக்கு எண்ணிக்கையில் ராஜு மற்றும் பிரியங்கா தான் முதல் இரண்டு இடங்களை பெற்றிருப்பதாக தெரிகிறது. ஆனால் இப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரியங்கா வெளியேறி இருக்கும் நிலையில் அவர் இறுதி போட்டியில் இடம்பிடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

மீண்டும் பள்ளிகள் திறப்பு, மாணவர்களுக்கு ‘இது’ கட்டாயம் – மாநில அரசு அறிவிப்பு!

இருந்தாலும் பிரியங்கா ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறி இருக்கும் நிலையில், நிகழ்ச்சி குழுவினரின் திட்டத்தின் படி, நிரூப் அல்லது அமீர் டைட்டிலை வெல்வதற்கு அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படிப்பட்ட பல்வேறு பேச்சுகளுக்கு மத்தியில் பிக் பாஸ் டைட்டிலை இம்முறை யார் வெல்லப்போவது என்று நாளை (ஜன.16) வெளியாக இருக்கும் ஃபினாலே எபிசோடுகளில் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here