மீண்டும் கம் பேக் கொடுக்க இருக்கும் ‘ராஜா ராணி’ சீரியல் புகழ் ஆலியா – வைரலாகும் பதிவு!

0
மீண்டும் கம் பேக் கொடுக்க இருக்கும் 'ராஜா ராணி' சீரியல் புகழ் ஆலியா - வைரலாகும் பதிவு!
மீண்டும் கம் பேக் கொடுக்க இருக்கும் 'ராஜா ராணி' சீரியல் புகழ் ஆலியா - வைரலாகும் பதிவு!
மீண்டும் கம் பேக் கொடுக்க இருக்கும் ‘ராஜா ராணி’ சீரியல் புகழ் ஆலியா – வைரலாகும் பதிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மக்களிடையே நாள் இடத்தை பிடித்தவர் சின்னத்திரை நடிகை ஆலியா மானசா. இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆலியா மானசா:

சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் பல விமர்சனங்களை கடந்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் நடிப்பிலும் தனி முத்திரை பதித்து வருகிறார் ராஜா ராணி புகழ் ஆலியா மானசா. அந்த வகையில் கடந்த 2019 ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தவர் நடிகை ஆலியா மானசா.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

இந்த தொடரின் வெற்றியை அடுத்து பல விளம்பரங்களிலும் நடித்து புகழ் பெற்றார். ஆல்யா தனது 17 வயதில் மாடலாக அவரது வாழ்க்கை பாதையை தொடங்கி சிறிது காலம் ஆர் ஜே வாக இருந்துள்ளார். பிறகு நடன பயிற்றுவிப்பாளராக இருந்த ஆல்யா அவ்வபோது வெளியிடும் டான்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிலையில் ராஜா ராணி சீரியல் இவரது வாழ்க்கையில் ஒரு தனி இடத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதை அடுத்து ஆலியா அதே சீரியல் கதாநாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2020 மார்ச் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் ஆலியா இரண்டாவது குழந்தை கர்ப்பமான நிலையில் சீரியலில் இருந்து விலகினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த நிலையில் ஆலியா மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுவும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்க உள்ளதாக சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது வரை விஜய் டிவி சீரியலில் நடித்து வந்த ஆலியா தற்போது சன் டிவியில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!