‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் முல்லை? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். அந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த சீரியலில் தற்போது நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை
தமிழகத்தில் இன்று வரை பின்பற்றப்பட்டு வரும் கூட்டு குடும்ப வாழ்க்கையினை மிகவும் அழகாக எடுத்து காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. கூட்டு குடும்பத்தில் இருக்கும் சந்தோசம் மட்டுமின்றி கவலைகள் மற்றும் சண்டைகள் என்று அனைத்தையும் மிகவும் அழகாக எடுத்து காட்டி வருகிறது. தற்போது இந்த சீரியலில் கதிர் மற்றும் முல்லை இருவரும் குடும்பத்தினை விட்டு பிரிந்து தனியாக கடை நடத்தி வருகின்றனர். மிகவும் பிடித்தமான தம்பி கதிர் வீட்டை விட்டு வெளியே சென்றதால் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் மிகவும் கவலையில் இருந்து வருகின்றனர்.
மீண்டும் கம் பேக் கொடுக்க இருக்கும் ‘ராஜா ராணி’ சீரியல் புகழ் ஆலியா – வைரலாகும் பதிவு!
ஆனால், கதிர் & முல்லை இருவரும் குடும்பத்தினை பிரிந்த கவலையில் இருந்தாலும் தங்களது வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று இருவரும் முழு முயற்சியாக அதற்கான வேளைகளில் இறங்கி வருகின்றனர். ஒரு பக்கம் கதிர் & முல்லை பிரிந்த சோகம் தனத்திற்கு இருந்தாலும் இருவரும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று மறைமுகமாக உதவி செய்து வருகின்றனர். இப்படி சீரியல் பல நல்ல திருப்பங்களுடன் மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து வருகிறது.
இப்படியாக இருக்க, இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவியா அறிவுமணி விரைவில் சீரியலில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. முதன் முதலாக முல்லை கதாபாத்திரத்தில் நடிகை சித்ரா நடித்து வந்தார். ஆனால், அவரது திடீர் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த கதாபாத்திரத்தில் நடிகை காவியா அறிவுமணி ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்த போது ரசிகர்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர், அவரது எதார்த்த நடிப்பு மிகவும் பேசப்பட்டது.
Exams Daily Mobile App Download
தற்போது நடிகை காவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களுடன் புகைப்படம் எடுத்து அதில் ‘miss u guys’ என்று பதிவிட்டுள்ளார். இதனால் அவர் கூடிய விரைவில் அந்த சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தியால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்