தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் லேசான மழை வரை பெய்து கொண்டிருக்கிறது. இதையடுத்து இன்றைய வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தாவது, வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் (செப்.4) மற்றும் நாளையும் (செப்.5) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IT துறையில் பணியாற்றுபவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், கரூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மீனவர்கள் இன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இதனால் மேற்கண்ட பகுதியில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!