சரவணனுக்கு புதிய பைக் வாங்கி ஓட்ட கற்றுக்கொடுக்கும் சந்தியா – வெளியான ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!

0
சரவணனுக்கு புதிய பைக் வாங்கி ஓட்ட கற்றுக்கொடுக்கும் சந்தியா - வெளியான 'ராஜா ராணி 2' ப்ரோமோ!
சரவணனுக்கு புதிய பைக் வாங்கி ஓட்ட கற்றுக்கொடுக்கும் சந்தியா - வெளியான 'ராஜா ராணி 2' ப்ரோமோ!
சரவணனுக்கு புதிய பைக் வாங்கி ஓட்ட கற்றுக்கொடுக்கும் சந்தியா – வெளியான ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியா, சரவணனுக்கு புதிதாக ஒரு பைக் வாங்கிக் கொடுத்து அதனை ஓட்டுவதற்கு கற்றுக்கொடுப்பது போல இந்த வாரத்துக்கான புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

ராஜா ராணி ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ”ராஜா ராணி 2′ சீரியலில் என்னதான் சிவகாமி, சந்தியாவை எப்போதும் திட்டிக்கொண்டு வெறுப்பது போல காட்டப்பட்டு வந்தாலும் அவ்வப்போது வெளியாகும் சரவணன் மற்றும் சந்தியாவின் காதல் காட்சிகள் எல்லாம் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சந்தியாவின் படிப்பை காரணம் காட்டி, அவரை வெறுத்து வந்த சிவகாமி இப்போது தான் அவரை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள துவங்கியுள்ளார்.

சிவகாமியிடம் புது வண்டி வாங்க இருப்பதாக சொல்லும் சரவணன், கிண்டல் செய்யும் ஆதி, செந்தில் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

ஆனாலும் அர்ச்சனா செய்யும் சில வில்லத்தனத்தால் செய்யாத தவறுக்கு அவ்வப்போது சிவகாமியின் வெறுப்பையும் சம்பாதிக்கிறார் சந்தியா. கடந்த சில எபிசோடுகளாக இப்படியே நகர்ந்து வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு போரடிக்க துவங்கியுள்ளது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘ராஜா ராணி 2’ சீரியலின் புதிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் சந்தியா, சரவணனுக்கு புதிய பைக் எடுத்துக் கொடுக்கிறார்.

பண மோசடி கும்பலை தேடி அலையும் எழில் , கோவத்தின் உச்சியில் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

ஆனால் தனக்கு பைக் ஓட்டத் தெரியாது என்று சரவணன் சொல்ல சந்தியா, சரவணனை பின்னால் அமர சொல்லி பைக்கை ஒட்டிக் கொண்டு போகிறார். இப்படி பைக்கில் செல்லும் போது வழக்கமாக வரும் ஸ்பீட் பிரேக்கர் காட்சிகள் ‘ராஜா ராணி 2’ சீரியலிலும் இடம்பெற்றுள்ளது. அதே போல ஸ்பீட் பிரேக்கரில் சரவணன் சந்தியா மீது மோத, சந்தியா சரவணனின் கையை எடுத்து தனது தோள் மீது வைக்கிறார். இப்படி வெளியான ‘ராஜா ராணி 2’ சீரியலின் காதல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!