குடி போதையில் சந்தியா மீதுள்ள பாசத்தை காட்டிய சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

0
குடி போதையில் சந்தியா மீதுள்ள பாசத்தை காட்டிய சிவகாமி - இன்றைய
குடி போதையில் சந்தியா மீதுள்ள பாசத்தை காட்டிய சிவகாமி - இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!
குடி போதையில் சந்தியா மீதுள்ள பாசத்தை காட்டிய சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணனும் சந்தியாவும் சந்தோசமாக நடனம் ஆடிக் கொண்டிருக்க சந்தியா கால் சுளுக்கி விட்டது. பின் சிவகாமி குடித்துவிட்டு சந்தியா மீது உள்ள பாசத்தை காட்டுகிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சுந்தரம் வந்து மீண்டும் ஒரு ஆரஞ்சு ஜூஸ் கொடுங்கள் என கேட்க, ஆரஞ்சு ஜூஸ் எல்லாம் இங்கே இல்லை என சொல்கிறார். அப்போது இங்கே இருந்தது என்ன என கேட்க அது சரக்கு என வேலை செய்பவர் சொல்கிறார். பின் சந்தியாவும் சரவணனும் சந்தோசமாக நடனம் ஆடி கொண்டிருக்கின்றனர். அப்போது சரவணனிற்கு ஆட தெரியாமல் இருக்க சந்தியா ஆட சொல்லிக் கொடுக்கிறார். பின் சந்தியாவின் காலில் சுளுக்கு ஏற்பட்டு விடுகிறது.

மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி & கண்ணம்மா – வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் உற்சாகம்!

உடனே பதறி போன சரவணன் சந்தியாவை வெளியே அழைத்து சென்று மருந்து போட்டு நீவி விடுகிறார். அவரது அன்பை பார்த்து மற்ற போட்டியாளர் ஒருவர் சந்தோசப்படுகிறார். பின் அர்ச்சனா நடனம் ஆடி களைப்பில் இருக்க செந்தில் உடன் சென்று ஆரஞ்சு ஜூஸ் என நினைத்து குடிக்க செல்கிறார். உடனே செந்தில் அதை வாங்கி பார்த்து இது ஆரஞ்சு ஜூஸ் இல்லை சரக்கு என செல்கிறார். ஏற்கனவே நீ குடித்து விட்டு செய்தது எல்லாம் போதும் என அதை வாங்கி வைக்கிறார்.

சிவகாமி போதையில் இருக்க சுந்தரம் அவரை ரூமிற்கு அழைத்து செல்ல பார்க்கிறார். ஆனால் சிவகாமி முடியாது என சொல்லி சத்தம் போடுகிறார். பசங்க அனைவரும் வந்து பார்த்து சிவகாமியை ரூமிற்கு அழைத்து செல்ல இருக்கின்றனர். ஆனால் அவர் வராமல் சரவணன் பற்றி பேசுகிறார். அவன் படிக்காதவன் அவனுக்கு ஒன்றும் தெரியாது சிவகாமி இனிப்பு கடை இருக்கிறது அது தான் எங்க கடை அதை தவிர இவனுக்கு ஒன்றும் தெரியாது என சொல்கிறார். என் பையன் ரொம்ப பயந்தவன் என சொல்கிறார்.

தொழிலில் வந்த பிரச்சனையை தைரியமாக பேசி முடித்த பாக்கியா, ராதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்த கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

ஆனால் அவன் இந்த நிலையில் நிற்க சந்தியா தான் காரணம் அவனுக்கு நல்ல மனைவி அவள். அவளுக்கு சமைக்க தெரியாமல் இருக்கலாம் ஆனால் தினமும் அதற்கான முயற்சிகளை அவள் செய்யாமல் இருந்தது இல்லை. அவளை எனக்கு மிகவும் பிடிக்கும் என் பையனும் சந்தியாவும் சந்தோசமாக இருக்க வேண்டும் என சத்தம் போடுகிறார். சந்தியா சிவகாமி மனதில் இருப்பதை கேட்டு சந்தோசப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!