தொழிலில் வந்த பிரச்சனையை தைரியமாக பேசி முடித்த பாக்கியா, ராதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்த கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
தொழிலில் வந்த பிரச்சனையை தைரியமாக பேசி முடித்த பாக்கியா, ராதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்த கோபி - இன்றைய
தொழிலில் வந்த பிரச்சனையை தைரியமாக பேசி முடித்த பாக்கியா, ராதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்த கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
தொழிலில் வந்த பிரச்சனையை தைரியமாக பேசி முடித்த பாக்கியா, ராதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்த கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி மருத்துவமனைக்கு ராதிகாவை கூப்பிட வர பின் ராதிகாவின் அம்மா கல்யாணம் செய்து கொண்டபின் இங்கே வந்தால் போதும் என சொல்கிறார். பாக்கியாவின் பிசினஸ் பிரச்சனை பெரிதாக பாக்கியா தைரியமாக பேசி சமாளிக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா வீட்டிற்கு கோபி வருகிறார். அப்போது அலுவலகத்தில் நடந்த பிரச்சனை பற்றி நான் பேச சொல்லிருக்கேன் என சொல்கிறார். இன்று டாக்டர் வர சொன்னார்கள் அல்லவா என கோபி கேட்க, ஆமாம் என ராதிகா சொல்கிறார். பின் ராதிகாவின் அம்மா வர உங்களிடம் தனியாக பேச வேண்டும் என சொல்கிறார். நீங்க ராதிகாவை கல்யாணம் செய்ய இருப்பதாக சொன்னதால் தான் நான் உங்களை இப்போது வீட்டிற்குள் அனுமதிக்கிறேன். எப்போது கல்யாணம் செய்து கொள்வீங்க என கேட்கிறார்.

கேக் வெட்டி கயல் பிறந்தநாளை கொண்டாடிய குடும்பத்தினர், தனம் மூர்த்தி அன்பை புரிந்து கொண்ட மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அப்போது கோபி சீக்கிரமாக கல்யாணம் செய்து கொள்வேன் என கோபி சொல்கிறார். மறுபக்கம் தாத்தா பாக்கியாவின் பிரச்சனையை தீர்த்து வைக்க கிளம்ப அந்த நேரம் எழில் வருகிறார். எழில் இரவெல்லாம் தூங்காமல் வர அம்மா எங்கே என கேட்கிறார். அம்மா ஆபிஸ் சென்றிருக்கார் என சொல்ல, அம்மா அலுவலகத்தில் பெரிய பிரச்சனை சென்று ஈஸ்வரி சொல்கிறார். உடனே எழில் கிளம்பி செல்கிறார். பாக்கியா வேலை செய்து கொண்டிருக்க செல்வி நேற்று அந்த பெண்கள் மீண்டும் வந்தார்கள் என சொல்கிறார்.

அவங்க போலீஸ் கூட்டிக் கொண்டு வருவேன் என சொன்னதாக சொல்ல, பாக்கியா யார் வேண்டும் என்றாலும் வரட்டும் என சொல்கிறார். அப்போது போலீஸ் வர அந்த பெண்கள் இங்கே ஹோட்டல் நடத்த கூடாது என சொன்னால் கேட்கமாட்டேங்குறார்கள் என சொல்கிறார். இது ஹோட்டல் இல்லை என செல்வி சொல்ல, போலீஸ் வீடுகள் இருக்கும் பகுதியில் ஹோட்டல் நடத்த கூடாது என தெரியாதா என்று கேட்கிறார். இது ஹோட்டல் இல்லை மசாலா பொருள்கள் அரைக்கும் இடம் என பாக்கியா சொல்ல, போலீஸ் கேட்காமல் இருக்கிறார். அப்போது பாக்கியா பேசி பார்க்கிறார். ஆனால் கேட்பதாக இல்லை.

தாத்தா பெயரை கேட்டு லக்ஷ்மியை அழ வைக்கும் ஹேமா, கண்ணம்மா கஷ்டப்படுவதை பார்த்து அனுதாபப்படும் பாரதி – இன்றைய எபிசோட்!

எழில் அப்போது வர பாக்கியா வேலை செய்யும் பெண்களின் நிலைமையை பற்றி சொல்கிறார். எல்லாரும் புருஷன் இல்லாமலும் புருஷன் சரி இல்லாமல் இருப்பவர்கள் இவர்களை வைத்து சின்னதாக தொழில் செய்து முன்னேறி வருகிறோம் என சொல்கிறார். எல்லார் வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் இருக்கிறது என சொல்கிறார். அதை கேட்டு போலீசார் மனம் இறங்கி இவ்வளவு சொல்கிறார்கள் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என சொல்ல, பாக்கியா ஒரு மாதம் வேலை செய்கிறோம் பிரச்சனை வந்தால் நாங்க காலி செய்துவிடுகிறோம் என சொல்கிறார்.

அந்த பெண்கள் எதுவும் பிரச்சனை வர கூடாது என சொல்ல, பாக்கியாவை செல்வி பாராட்டுகிறார். எழில் அம்மா சூப்பர் என வாழ்த்துக்களை தெரிவிக்க, நீ எப்போது வந்த என பாக்கியா கேட்கிறார். தாத்தா விஷயத்தை சொன்னார்கள் உனக்கு உதவி செய்யலாம் என்று வந்தேன் ஆனால் உனக்கு உதவியே தேவை இல்லை, நீ எவ்வளவு தைரியமாக பேசினாய் தெரியுமா என சொல்ல, நம்ம பிரச்சனையை நாம தான தீர்க்க வேண்டும் என பாக்கியா சொல்கிறார்.

அமிர்தா வீட்டில் அப்பா மருந்து வேண்டும் என சொல்ல நான் சென்று வாங்கி வருகிறேன் என அமிர்தா சொல்கிறார். வேண்டாம் எழில் வரும் போது வாங்கி வர சொல்கிறேன் என அப்பா சொல்ல, அவர் வேண்டாம் நான் வாங்கி வருகிறேன் என அமிர்தா கோவமாக சொல்கிறார். ஏன் அவனுடன் சண்டையா என அம்மா கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறார். அப்போது எழில் வர அவரே மருந்து வாங்கி வருகிறார். அப்போது அமிர்தா உள்ளே செல்ல, பார்த்தீங்களா எப்படி உள்ளே போகிறாள் என அவளை கேட்டால் ஒன்றுமில்லை என சொல்வதாக சொல்கிறார். அதை கேட்டு எழில் வருத்தப்படுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here