மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி & கண்ணம்மா – வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி & கண்ணம்மா - வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி & கண்ணம்மா - வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி & கண்ணம்மா – வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கதையின் நாயகன் மற்றும் நாயகிக்கு இடையில் உள்ள சண்டை தான் மொத்த கதையையும் நகர்த்தி வருகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ:

தமிழக மக்களுக்கும் சின்னத்திரை சீரியல்களுக்கும் இடையில் உள்ள பந்தத்தை யாராலும் மறுக்க முடியாது. மக்களின் அன்றாட பொழுதுபோக்கில் சீரியல்கள் தான் இன்னமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி சீரியல்களில் நடக்கும் அனைத்தையும் நிஜ வாழ்க்கையில் நடப்பது போல் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு விவாதிப்பவர்களும் உள்ளனர். அந்த வகையில், தற்போது தமிழகத்தில் சின்னத்திரையின் நம்பர் 1 சீரியலாக இருப்பது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தான். இந்த தொடரில் கதையின் நாயகன் மற்றும் நாயகியான பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு இடையில் நடக்கும் சண்டை தான் மொத்த கதையையும் நகர்த்தி வருகிறது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை – அரசுக்கு வலியுறுத்தல்!

காதலித்து திருமணம் செய்து கொள்ளும் கண்ணம்மாவை, பாரதி சந்தேகப்படுகிறார். இதனால் கண்ணம்மா தனியா பிரிந்து வந்து தனியாக வாழ தொடங்குகிறார். கிட்டத்தட்ட 9 வருடங்கள் கழித்து குழந்தைகளுக்காக கண்ணம்மா மீண்டும் பாரதியுடன் சேர வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் பாரதி தொடர்ந்து பிரிந்து விடும் எண்ணத்தில் தான் இருக்கிறார். தற்போது பாரதியும், கண்ணம்மாவும் ஒன்றாக ஒரே வீட்டில் நீதிமன்ற உத்தரவு படி வாழ்ந்து வருகின்றனர். இப்போதும், இவர்கள் இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் தான் வருகின்றது.

இரவு நேர ஊரடங்கு அமல் – மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்! ஓமைக்ரான் எதிரொலி!

இவர்கள் இருவரும் மீண்டும் பழைய படி எப்போது ஒன்றாக சேருவார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், பாரதியாக நடிக்கும் அருண் மற்றும் கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா இருவரும், சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் குழந்தையின் முதல் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் போட்டோவை அதிக அளவில் பகிரப்பட்டு வருவதால் தற்பொழுது இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!