விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "ராஜா ராணி 2" சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாபாத்திரம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் கதாநாயகி ஏற்கனவே மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது வில்லியும் மாற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ராஜா ராணி 2 வில்லி:

சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்கள் இருந்தாலும் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் தினசரி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. இதன் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. இதில் சித்து மற்றும் ஆலியா ஜோடியாக நடித்தனர். ஆனால் ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக நடிகை ரியா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விஜே சித்ராவை தொடர்ந்து மர்மமான முறையில் இறந்த சீரியல் நடிகை – போலீஸ் தீவிர விசாரணை!

ரியா தன்னுடைய முழு பங்களிப்பையும் செலுத்தி நடித்து வருவதால் கதாநாயகி மாற்றம் ஏற்பட்டதற்கான தாக்கம் எதுவும் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் வில்லியாக நடிகை விஜே அர்ச்சனா நடித்து வருகிறார். அவர் வில்லியாக இருந்தாலும் பல இடங்களில் மாட்டிக் கொள்வதால் நகைச்சுவை வில்லியாக அவருடைய கதாபாத்திரம் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் விஜே அர்ச்சனா சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

ஏற்கனவே கதாநாயகி சீரியலை விட்டு விலகிய நிலையில் தற்போது வில்லியும் விலக இருப்பதாக வெளியான செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அவர் சமீபத்தில் கூட விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் விருது வாங்கியதை தொடர்ந்து இந்த செய்தி வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் இதற்கான காரணமும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!