ரயில்வே துறையின் சிறப்புகளும் !! அதன் நன்மைகளும்!!

0
ரயில்வே துறையின் சிறப்புகளும் !! அதன் நன்மைகளும்!!
ரயில்வே துறையின் சிறப்புகளும் !! அதன் நன்மைகளும்!!
ரயில்வே துறையின் சிறப்புகளும் !! அதன் நன்மைகளும்!!

மத்திய அரசு வேலையான ரயில்வே வேலையின் சிறப்பம்சம் பற்றியம் மேலும் இந்த வேலைகளை மக்கள் விரும்புவதற்கான காரணம் குறித்தும் இந்த செய்தி குறிப்பில் காண்போம்.

ரயில்வே வேலையின் சிறப்பம்சங்கள்:

உலகின் மிக பெரிய துறைகளில் அதிகமான வேலையாட்களை கொண்டிருக்கும் துறைகளில் ரயில்வே துறை 9-ஆம் இடத்தில் உள்ளது. உலகில் உள்ள ரயில்வே துறைகளில் 4-வது பெரிய துறையாக இந்திய ரயில்வே செயல்படுகிறது. மேலும் 15 லட்சத்திற்கு அதிகமான ஊழியர்கள் ரயில்வே துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

1முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல்பாஸ் – தமிழக அரசு முடிவு!!

ரயில்வேயில் பணிபுரிய ஊழியர்களை ரயில்வே ஆட்சேர்ப்பு ஆணையம் தேர்ந்தெடுக்கிறது. அதற்கான தேர்வுகளை அந்த ஆணையமே செயல்படுத்துகிறது. ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை பற்றிய அறிவிப்பு ரயில்வே ஆட்சேர்ப்பு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைத்தளத்தில் வெளியிடப்படும். விருப்பமுள்ளவர்கள்  மற்றும் தகுதி உள்ளவர்கள் அந்த இணையதளத்தின் வாயிலாக தகுதியுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அனைவரின் விருப்ப வேலையாக ரயில்வே வேலை உள்ளது. மேலும் மத்திய அரசு வேலையான இது பல சிறப்பம்சங்களும் சலுகைகளும் பெற்றுள்ளது. இந்திய ரயில்வே துறை ரயில்வே வேலைக்கான சிறப்பம்சங்கள் பின்வருமாறு,

1. இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற வேலைக்கான அதிகப்படியான வேலை வாய்ப்புகளை  ஆர்.ஆர்.பி  வழங்குகிறது. இதனால் மத்திய அரசு வேலைகளில் சுலபமாக வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

2. இந்தியா முழுவதும் வேலை தேடுபவர்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்த இந்தியா ரயில்வே 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை வடக்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே, மேற்கு ரயில்வே மற்றும் தெற்கு ரயில்வே ஆகும். இம்மண்டலங்கள் மூலமாக இந்தியா முழுவதும் அதிகம் பேர் வேலைவாய்ப்பு பெற்று பயனடைவர்.

3. ரயில்வே துறையில் நடத்தப்படும் தேர்வுகள் ஆர்.ஆர்.பி மூலம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுகிறது இதனால் தவறுகள் நடக்க வாய்ப்புகள் குறைவக உள்ளது.

4. ரயில்வே துறை இந்திய அரசின் வருவாய் ஈட்டும் மிக முக்கியமான துறையாகும். ஆகையால் மற்ற அரசாங்க வேலைக்கான அனைத்து சலுகைகளும் ரயில்வே துறையில் வழங்கப்படுகின்றன.

5. ரயில்வே வேலை நிரந்தர வேலையாக உள்ளது. ஒருவரது வேலைக்காலத்திலும் ஓய்வு காலத்திலும் பல சலுகைகளை வழங்குகிறது. ஓய்வு காலத்திற்கு பின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குகிறது.

ஐஐடி பாதிப்பு 191ஆக அதிகரிப்பு – தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு??

6. மேலே குறிப்பிட்டது போல் ரயில்வே வேலை நிரந்தர வேலையாக உள்ளது ஒருவர் தனது வேலை காலத்தில் இறக்க நேரிட்டால் அவரது வேலை குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும்.

7.தொழிலாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வலுவான தொழில்சங்கங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கங்கள்  வேலை செய்யும் தொழிலாளர்களின் தேவைகளுக்காக போராடுகிறது.

8.மேலும் ரயில்வே ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்க அந்தந்த ஊர்களில் அரசாங்கம் சார்பாக ரயில்வே குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

9. ரயில்வே ஊழியர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு நாடு முழுவதும் ரயில்வே துறைகளுக்கு கீழ் செயல்படும் ரயில்களில் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

10. ரயில்வே ஊழியர்களுக்கான இலவச மருத்துவமனைகள் அந்தந்த ரயில்வே குடியிருப்புகள் அமைந்திருக்கும் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் இலவசமாக அதில் மருத்துவம்  பார்க்கலாம்.

11. ரயில்வே துறையில் வேலை செய்பவர்களின் குடும்பத்தினர் அனைவர்க்கும் மருத்துவ காப்பிட்டு திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

12. ரயில்வே துறை பணியாளர்களுக்கு ஏற்ப தனி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைக்கப்பட்டு சலுகைகள் வழங்க படுகின்றனர்.

இவ்வாறாக பல சிறப்பம்சங்களை ரயில்வே துறை வேலை பெற்றுள்ளது. எனவே வேலை தேடுவோர் ரயில்வே துறையின் ஆர்.ஆர்.பி இணையதளத்தில் தங்கள் விருப்பமான வேலையை தேர்வு செய்து பயனடையலாம். இந்த நிறுவனத்தின் Railway Recruitment Board www.rrbcdg.gov.in மற்றும் Railway Recruitment Control Baord – RRCB www.rrcb.gov.in ஆகியவை அதிகாரபூர்வ இணையத்தளமாக செயல்படுகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!