திருமணம் செய்து கொள்ள சொல்லி கோபிக்கு செக் வைக்கும் ராதிகா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு!

0
திருமணம் செய்து கொள்ள சொல்லி கோபிக்கு செக் வைக்கும் ராதிகா? 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த ட்விஸ்டு!
திருமணம் செய்து கொள்ள சொல்லி கோபிக்கு செக் வைக்கும் ராதிகா? 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த ட்விஸ்டு!
திருமணம் செய்து கொள்ள சொல்லி கோபிக்கு செக் வைக்கும் ராதிகா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ மெகா சங்கமத்தில் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் கோபியின் உண்மை முகத்தை ராதிகாவிடம் தெரியப்படுத்த, உடனே திருமணம் செய்து கொள்ள சொல்லி ராதிகா அவருக்கு செக் வைப்பது போல அடுத்த ட்விஸ்டு அமையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

பல எதிர்பாராத கதைக்களத்துடன் பயணித்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்களின் மகா சங்கமம் சூப்பரான டிவிஸ்டுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதுவரை கோபியின் அப்பா ராமமூர்த்தியின் பிறந்தநாள் விழாவுக்காக குன்னக்குடியில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பாக்கியாவின் வீட்டுக்கு வந்திருந்தது. இப்போது, கொண்டாட்டம் எல்லாம் முடிந்த பிற்பாடு தான் கோபியின் நிஜ முகம் மூர்த்தி மற்றும் தனத்திற்கு தெரிய வருகிறது. இத்தனை நாட்களாக ராதிகாவுடன் பழகுவதை மறைத்து கண்ணாமூச்சி ஆடி வந்த கோபி, மூர்த்தியிடம் கையும் களவுமாக சிக்கி விட்டார்.

Exams Daily Mobile App Download

குறிப்பாக, கோபியுடன் இருப்பது ராதிகா என்ற உண்மையை எழிலை விட சீக்கிரமாக கண்டுபிடித்து விட்டார்கள் இவர்கள் இருவரும். இதற்கிடையில், கோபியின் டைவர்ஸ் விஷயமும் ராதிகா மற்றும் பாக்கியா மூலம் தனத்திற்கு தெரிய வருகிறது. இதை எப்படி இவர்கள் இருவரும் முடிக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், கோபி பற்றிய உண்மைகளை அவரிடமே சொல்லி விடுகிறார் மூர்த்தி. இதனால், கோபி அவரை தாறுமாறாக பேசி விடுகிறார்.

பார்வதியை காணாமல் தவிக்கும் குடும்பம், செல்வம் மீது சந்தேகப்படும் சந்தியா – “ராஜா ராணி 2” அடுத்த வாரம்!

இதற்கு அடுத்தபடியாக, இந்த மெகா சங்கமத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் முன்னால் வைத்து கோபி செய்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா, அதை நான் சொல்கிறேன் என்று உணர்ச்சி பூர்வமாக கொந்தளிக்கிறார் மூர்த்தி. ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை மூர்த்தியும், தனமும் மீண்டும் ராதிகாவை பார்க்க செல்கின்றனர். அப்போது, நீங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கும் கோபி உண்மையில் நல்லவர் இல்லை என்று அவரிடம் சொல்கிறார்கள். ஆனால், கோபியின் மனைவி தான் பாக்கியா என்ற உண்மையை கூறினார்களா என்று தெரியவில்லை.

இந்த நிலையில், ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த கட்ட கதைக்களமாக, ராதிகாவை சந்திக்க வரும் கோபியிடம், நீங்கள் நல்லவர் இல்லை என்று குன்னக்குடியில் இருந்து வந்தவர்கள் சொல்கிறார்கள் என்று கேட்பது போலவும் அதற்கு கோபி வழக்கமாக பொய்களை சொல்லி சமாளிப்பது போலவும் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தவிர ராதிகா ஒருபடி மேலே போய், இதற்கெல்லாம் ஒரே முடிவு நீங்களும், நானும் திருமணம் செய்து கொள்வது மட்டும் தான். அதனால் இப்போதே தாலி கட்டுங்கள் என கையில் தாலியை கொடுப்பது போல ட்விஸ்டு இடம்பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here