பாக்கியாவின் வீட்டிற்கு நியாயம் கேட்க வரும் ராதிகா – அதிர்ச்சியில் எழில்! சீரியலில் அடுத்த திருப்பம்!

0
பாக்கியாவின் வீட்டிற்கு நியாயம் கேட்க வரும் ராதிகா - அதிர்ச்சியில் எழில்! சீரியலில் அடுத்த திருப்பம்!
பாக்கியாவின் வீட்டிற்கு நியாயம் கேட்க வரும் ராதிகா - அதிர்ச்சியில் எழில்! சீரியலில் அடுத்த திருப்பம்!
பாக்கியாவின் வீட்டிற்கு நியாயம் கேட்க வரும் ராதிகா – அதிர்ச்சியில் எழில்! சீரியலில் அடுத்த திருப்பம்!

பாக்கியா தான் கோபியின் மனைவி என்பது ராதிகாவிற்கு தெரியவந்ததும் ராதிகாவின் வீட்டுக்கு நியாயம் கேட்க ராதிகா வரும்படியும், உண்மையை அறிந்து கொண்டு எழில் கோபியை அடிப்பது போன்றும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி அனைத்து உண்மையும் உளறிக்கொட்டி சிக்கலில் மாட்டியுள்ளார். அதாவது கோபியின் மீது ராதிகாவிற்கு சந்தேகம் வந்ததுமே உங்களது வீட்டிற்கு என்னை இப்பொழுதே அழைத்துச் செல்லுங்கள் அல்லது குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தை எனக்கு காட்டுங்கள் என அடிக்கடி கோபியிடம் கேட்டவாறு இருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி கோபி நன்றாக குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்.

Exams Daily Mobile App Download

அப்போதும் விடாமல் கோபியிடம் இப்பொழுதே உங்களது வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள் என கூறுகிறார். உடனே கோபி குடிபோதையில் என்ன செய்வது என்று தெரியாமல் பாக்கியாவும் கோபியும் நெருக்கமாக இருக்கும் படியான புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் காட்டுகிறார். அந்த புகைப்படத்தை பார்த்ததும், பாக்கியா டீச்சர் தான் உங்களது மனைவியா, இவ்வளவு நாட்களாக என்னை ஏமாற்றி கொண்டிருந்தீர்களா எனக் கூறி ராதிகா கதறி அழுகிறார் .

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா & ஐஸ்வர்யா அடிக்கும் லூட்டிகள் – வைரலாகும் வீடியோ!

பின்பு கோபி வீட்டை விட்டு வெளியேறி பாக்கியாவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கேயும் குடிபோதையில் ராதிகாவிடம் பேசுவதுபோல உன்னை என்னால் மறக்கவே முடியாது. உனக்காகத்தானே எனது குடும்பத்தை விட்டு வந்தேன் என உண்மையை உளறிக் கொட்டுகிறார். கோபிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதும் பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. இதற்கு பிறகு கோபி என்னை ஏமாற்றி விட்டார் என பாக்கியாவின் வீட்டிற்கு ராதிகா நியாயம் கேட்க வருகிறார். அப்போது எழில் அதிர்ச்சி அடைந்து கோபியை அடிப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here